Saturday 1 November 2014

Indian Banks Atrocious - இந்திய வங்கிகளின் அய்யோக்கியத்தனம்

இந்திய வங்கிகளின் அய்யோக்கியத்தனம்

நவம்பர் 1 முதல் அதாவது இன்றுமுதல் ATM அட்டையை மாதத்திற்கு ஐந்து முறைதான் பயன்படுத்த முடியம் மற்றும் வேறு வங்கி ATM களை மூன்று முறைதான் பயன்படுத்த முடியும்.

இதனால் லாபம் வங்கிகளுக்குத்தான் எப்போதும்போலவே நம் வாயில் மண்தான்!. காரணம் என்னவென்று யோசித்துப் பார்த்தால் நன்றாகவே புரியும். சமிபகாலமாக கடனட்டைகள் (Debit Cards) மக்களிடையே பயன்படுத்துவது குறைந்துள்ளது இதனால் வட்டி மூலமாக வந்துகொண்டிருந்த வருவாய் இப்போது அந்த அளவிற்கு வருவதில்லையே. எவன் மண்டையில் உதித்த வழி என்றுத் தெரியவில்லை, அறை எடுத்து யோசித்து வைத்தார்கள் மக்களுக்கு மிகப்பெரிய ATM வேட்டு!.

ஆம், ATM பயன்படுத்துவதை குறைத்தால் நிச்சயமாக கடனட்டைகள் பயன்பாடு உயரும். எப்படி என்ற சந்தேகமா?, இன்றைய சூழ்நிலையில் நாம் ஒரு மாதத்திற்கு சராசரியாக குறைந்தது 30 முறை பயன்படுத்துவதாக ஒரு புள்ளி விபரம் சொல்கிறது. இப்போது  மொத்தம் எட்டுமுறை என்றால் ஆரம்பத்தில் நாம் சிக்கனமாகப் பார்த்து பணம் எடுப்போம், ஆனால் எத்தனை நாளைக்கு?.


வெகுவிரைவில் நாம் எல்லா பணத்தையும் எடுத்து செலவுசெய்ய ஆரம்பித்துவிடுவோம். அதன்பின் என்ன நிலைமை? பழைய நிலைமைதான்!. கடனட்டைகள் பயன்பாடு அதிகமாகும், அதனால் நாம் வங்கிகளுக்கு நாம் வட்டியுடன் சேர்த்துக்கட்டவேண்டும். இதனால் வங்கிகளின் வருமானம்தான் உயருமே! பிறகென்ன நம்முடைய கோமணம் காற்றில் பறக்கும்!. உலகிலேயே இந்தியர்கள்தான் கடனட்டைகளை குறைவாக பயன்படுத்துகிறார்கள். இப்பொது தெரிகிறதா ஏன் இந்த நடவடிக்கை என்று?.

No comments:

Post a Comment