Friday 31 October 2014

கொல்லிமலை - KolliHills

பெயர்க்காரணம்

பலவிதமான நோய்களைகொல்லக்கூடிய மூலிகைவளம் நிரம்பிய மலை என்பதால் "கொல்லிமலை" என்ற பெயர் பெற்றது என்றும் கூறப்படுகிறது.

நாமக்கல் நகரில் இருந்து 55 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. சோளக்காடு வரை 70 கொண்டை ஊசி வளைவுகள் கொண்டமலைப் பாதையின் தூரம் சுமார் 26 கி.மீ.இது கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி ஆகும்.

கொல்லிமலைக்கு நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம் மற்றும் சேலம் நகர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது. மலைப்பாதைகளில் பயணிக்க ஏதுவான சிறிய ரக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுற்றுலா வாகனங்களில் வந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

1000 முதல் 1300 மீ உயரம் கொண்ட இந்த மலையின் பரப்பளவு சுமார் 280 சதுர கி.மீ.

சுற்றுலாத் தலங்கள்


1. ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி
2. கொல்லிப் பாவைக் கோவில்
3. அறப்பளீஸ்வரர் கோவில்
4. சீக்குப்பாறை வியூ பாயிண்ட் மற்றும் சேலூர்நாடு வியூ பாயிண்ட்
5. வாசலூர்பட்டி படகுச் சவாரி
6. தாவரவியல் பூங்கா (பணிகள் நடைபெற்று வருகின்றன)
7.வல்வில் ஓரி சிலை

8.மாசில்லா அருவி


திருவிழாக்கள்:
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வல்வில் ஓரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
அறப்பளீஸ்வரர் கோவில்,மாசி பெரியசாமி கோவில்,கொங்காயி அம்மன் கோவில் திருவிழாக்களும் புகழ்பெற்றவை.

No comments:

Post a Comment