Friday 21 November 2014

நடிகர் சிம்புவை பற்றித்தெரியுமா


நடிகர் சிம்புவின் முழு பெயர் சிலம்பரசன் தேசிங்கு ராஜேந்தர், தமிழ் சினிமாவில் குழந்தை நட்ச்சத்திரமாக அறிமுகம் ஆனவர். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இவருடைய ஆளுமை பலதரப்பட்டது.

நல்ல நடிகர்

தன் சக நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் உண்மையிலேயே நடிக்கத் தெரிந்த நடிகர். கடந்த 2006ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளார். சிறந்த நடிகருக்கான எடிசன் விருது மற்றும் பிலிம்பேர் விருது விண்ணைத் தாண்டிவருவாயா திரைப்படத்திற்காக பெற்றுள்ளார்.

இயக்குனர்

வல்லவன் திரைப்படம் இவர் இயக்கியதுதான் முதல் படமாக இருந்தாலும் தேர்ந்த இயக்குனர் போல் படத்தை எடுத்திருந்தார் படமும் சூப்பர் ஹிட் ஆக அமைந்தது.

பின்னணிப்பாடகர்

இவர் பாடி இதுவரை 47 பாடல்கள் வெளிவந்துள்ளது அத்தனையும் சூப்பர் டுப்பர் ஹிட், வேர் இஸ் தி பார்ட்டி, காதல் வளர்த்தேன் போன்றவை முக்கியமான பாடல்கள்.

நடனம்

இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன சமயத்திலேயே நடனத்தில் புகுந்து விளையாடுவார். இப்போது கேட்கவா வேண்டும் இவருடைய எல்லாப் படங்களிலும் இவரின் நடனதிர்க்காகவே இரு பாடல்கள் இருக்கும். பாடல்களில் இவவரின் நடனமும் அற்புதமாக இருக்கும்.

பாடலாசிரியர்

இவர் நடிக்கும் படத்தில் குறைந்தபட்சம் ஒரு பாடலாவது இவரே எழுதியதாக இருக்கும். பாடல் வரிகள் கவிதைகள் படிப்பதை போல் ஒரு அனுபவத்தைத் தரும். அதுமட்டுமல்ல குத்து பாடல்கள் எழுதுவதில் கைத்தேர்ந்தவர்.

இசை அமைப்பாளர்

ஆம் இசையிலும் விதத்தைகாரர்தான், மன்மதன் படத்தில் வரும் டரும்ஸ் இசை இவர் அமைத்ததுதான். அதனால்தான் இவரின் படத்தில் பாடல்கள் எல்லாமே ஹிட் ரகமாக இருக்கிறது.

கதாசிரியர்

இவர் நல்ல கதாசிரியர்கூட மன்மதன், வல்லவன் போன்ற படங்களின் கதையை எழுதியவர் இவர்தான் இதற்க்காக சிறந்த கதாசிரியர் விருதும் பெற்றுள்ளார்.

இசை கோர்வையாளர்

இவர் இசை புயல் A.R.ரகுமானின் தீவிர விசிறி, அவரின் இசையைப் பின்பற்றி நிறைய இசை அமைபார், இந்த விடியோக்கள் நிறைய தொலைக்காட்சிகளில் நிறைய முறை ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

படத்தொகுப்புபாளர்

ஆச்சரியப்பட வேண்டாம் படத்தில் பணியாற்றும் படத்தொகுப்புபாளர்களுடன் இவரும் சேர்ந்து பணியாற்றுவார்.

படத்தயாரிப்பாளர்

இவர் நடித்துக்கொண்டிருக்கும் “ இது நம்ம ஆளு “ திரைப்படம் இவரின் தயாரிப்பில்தான் உருவாகிறது. இப்போது தெரிகிறதா நடிகர் சிம்புவுக்கு எத்தனை முகங்கள் என்று பிடித்திருந்தால் பகிருங்கள்.


No comments:

Post a Comment