Tuesday 4 November 2014

எண் 2 யில் பிறந்தவருக்குரிய பலன்கள்

2
எண் 2 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் சந்திரன் (Moon)
இந்த 2ம் எண்ணைப் பற்றி அனைத்து நூல்களும் மக்களை தேவையில்லாமல் பயப்படுத்துகின்றன. உண்மை அதுவன்று. பெரும் மரங்கள் சாய்ந்தாலும் நாணல் மட்டும் நிலைத்து நிற்கம். ஒவ்வொருவர் வாழ்விலும் புயல் (சோதனைகள்) என்பது நிச்சயம் ஏற்படும். அதற்கு எந்த எண்ணும் விதிவிலக்கல்ல. மற்ற எண்காரர்கள் துவண்டு விடும்போது இவர்கள் மட்டும் வாழ்க்கையின் சோதனைகளில் வளைந்து கொடுத்து, முன்னேறி விடுவார்கள். அம்பாளின் அருள் பெற்ற எண் இது. பகலுக்கு இராஜா சூரியன் என்றால் இரவுக்கு ராணி சந்திரன். சூரியன் தந்தைகாரன் சந்திரன் மாதாகாரகன். எனவே இந்த எண்காரர்களிடம் பெண்மையும், மென்மையும் உண்டு. இவர்கள் ஓரளவு தடித்த தேகத்தினர்தாம். இதில் பிறந்த ஆண்கள் சுருட்டை முடியையும், பெண்கள் நீண்ட முடியையும் கொண்டவர்கள்.
இவர்கள் எவ்வளவு தூரம் வளைந்து கொடுக்கிறார்களோ, பல சமயங்களில் அதைவிடக் கடின சித்தராகவும் மாறிவிடுவார்கள். மனத்தினால் செய்யும் தொழில்களில் (கற்பனை, கவிதை, திட்டமிடுதல் போன்றவற்றில்) மிகவும் விருப்பமுடன் ஈடுபடுவார்கள். இவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் குணம் உள்ளதால், மக்களால் பெரிதும் விரும்பப்படுவார்கள். கற்பனை கலந்து கவர்ச்சியுடன் பேசுவதால் இவர்களுக்கு மக்களாதரவு உண்டு. பெரும்பாலோருக்கு முன்னோர்கள் சொத்துக்கள் இருக்கும். இந்த எண்ணின் ஆதிக்கம் குறைந்தவர்கள் வீண்பிடிவாதம் கொண்டு தங்கள் வாழக்கையைத் தாங்களே கெடுத்துக் கொள்வார்கள்.
நீதிமன்ற வழக்குகளிலும் சிக்கலை தந்து விடும். முன்னோர் சொத்துக்களையும் இழக்க நேரிடும். மனதில் நிம்மதி இருக்காது. இவர்களின் வெற்றிக்கும் அல்லது தோல்விக்கம் ஒரு பெண்ணே காரணமாக இருப்பாள். காரணம் இவர்களுக்குச் சந்தேகம் குணம் அதிகம் உண்டு. இதனால் முழுமையாக யாரையும், நம்பாமல் திரும்பத் திரும்ப மற்றவர்களடன் சந்தேகம் கொள்வதால்தான். இவர்களுக்கு எதிரிகள் உருவாகின்றனர். எதையும் பதட்டத்துடனும், ஒருவித சோம்பலுடனும் அணுகும் குணத்தினையும் மாற்றிக் கொண்டால் இவர்கள் நிச்சயம் முன்னேறுவார்கள்.

முக்கிய காரியங்கள் எவற்றையும் சட்டென முடிக்காமல் காலரத்தைக் கழித்து விட்டு, பின்பு அவசரம் அவசரமாகச் செய்து முடிபார்கள். ஒரு மாதத்தின் இறுதியில்தான் அவசர அவசரமாக உட்கார்ந்து அந்தந்த மாதத்தின் வேலையை முடிப்பார்கள். தங்களது வாக்குறுதிகளை இவர்கள் காப்பாற்றுவது மிகவும் சிரமம். திருநெல்வேலி சென்றவுடன் அல்வா வாங்கி அனுப்புவதாகச் சொல்வார்கள். ஆனால் அனுப்ப மாட்டார்கள். சந்திர ஆதிக்கம் நன்முறையில் அமைந்திருந்தால் நல்ல திட்டங்கள் போட்டும் அவற்றில் வெற்றியும் அடைந்து விடுவார்கள். (உ&ம்) தேசத்தந்தை மகாத்மா காந்தி. தங்களிடம் பல திறமைகள் இருந்தும் துணிந்து செயல்பட விருப்பப்பட மாட்டார்கள். இல்லாததைக் கற்பனை செய்து கொண்டு தங்களது வாழ்க்கையில் முடிவெடுக்க முடியாமல் திண்டாடுவார்கள். காலையில் சுறுசுறுப்புடன் தொடங்குவார்கள். ஆனால் மாலைக்குள் ஊக்கம் குறைந்து, சோர்ந்துவிடும் இயல்பினர்.

No comments:

Post a Comment