Monday 3 November 2014

சுருளி நீர்விழ்ச்சி


தேனி மாவட்டம் கம்பம் அருகில் இருக்கிறது இந்த நீர் விழ்ச்சி. கம்பம் பேருந்து நிலையத்தில் இருந்து காந்தி சிலை எங்கே இருக்கிறது என்று கேட்டு அங்கே செல்லுங்கள். அங்கிருந்து சுருளி நீர்வீழ்ச்சிக்கு சிற்றுந்துகள் (மினிபஸ்கள்) ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் கிடைக்கும் ரூபாய் 10 பயணக்கட்டணம். சுற்றுலா வாகனத்தில் வந்தால் காந்திசிலை அருகே வந்து யாரிடமாவது சுருளி நீர்வீழ்ச்சிக்கு வழி கேட்டால் சொல்வார்கள்.

     சொல்லும் வழி எல்லாம் பச்சை பசேலன்று நெல் வயல்கள், திராட்சைத் தோட்டங்கள், நீரோடைகள் என பார்க்கவே அருமையாக இருக்கிறது. வாகனத்தை மெதுவாக செலுத்துங்கள் இயற்கைக் காட்சிகளை இரசிக்க ஏதுவாக இருக்கும்.

     பயணம் ஆரம்பித்து கொஞ்ச நேரத்திலேயே நீரோடைகள், வாய்க்கால்கள் வரும் தண்ணீரும் நம்முடனே பயணம் செய்யும். இந்த தண்ணிருக்கு நடுவே செல்வது மனதிற்கு நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். சுருளிப்பட்டி கடந்தவுடன் அந்த மலைகளின் அழகை காண நமது கண்கள் கொடுத்து வைத்திருக்கவேண்டும். நமது குழந்தை மிகவும் மகிழ்வார்கள்.

     இங்கே தங்கும் வசதிக்காக தங்கும்விடுதிகளும் இருக்கிறது, உணவு விடுதிகளும் இருக்கிறது, பழ வகைகள் கிடைக்கும். தயவுசெய்து சோப்பு ஷாம்பூ பயன்படுத்தாதிர்கள். வாகனத்தில் இருந்து இருங்கி இரண்டு கி.மீ தொலைவு நடந்து செல்லவேண்டும். சுற்றுலா வாகனத்திற்கு கட்டணம் வாங்கி கொஞ்சம் பாலத்தை தாண்டி இருக்கும் இடத்தில் நிறுத்திகொள்ளுங்கள், கொஞ்சம் நடப்பதும் மிச்சமாகும். அருவிக்கு நடந்து செல்லும் வழியில் குரங்குகளை காணலாம். தயவுசெய்து பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை போடதிர்கள்.

     நீர்வீழ்ச்சியில் குளிக்க 100 படிகள் மேலே ஏறவேண்டும், வயதானவர்கள் சிரமப்படலாம் ஆனால் ஏறிவிடுவார்கள் பிரச்சினை இருக்காது. அதேசமயம் மருத்துவ உதவிகள் கிடைப்பது சற்று சிரம்மம்தான் மேலும் மருந்துகடைகள் பார்த்த ஞாபகம் இல்லை அதனால் கிளம்பும்போது கம்பத்திலேயே தேவையான மருந்துகள், மாத்திரைகள் வாங்கினால் நல்லதுதான்.

     அருவியில் ஆண்கள் பெண்கள் தனித்தனியாக குளிக்க இடம் இல்லை ஒன்றாகத்தான் குளிக்க வேண்டும். இந்த பகுதி மக்கள் இந்த அருவியை சுருளிதீர்த்தம் என்று கூறுகிறார்கள், மருத்துவ குணங்கள் நிறைந்த நீர் என்று நம்பப்படுகிறது. தண்ணீரும் குடிக்க அருமையாக இருக்கும் ஆனால் தயவுசெய்து குடிக்கவேண்டாம் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

     உண்மையில் அருவியில் குளிக்கும்போது மிகவும் நன்றாக இருக்கும் இந்த நீரானது பல்வேறு மூலிகைகளைத் தாண்டி வருவதால் மனதிற்கும் உடலுக்கும் புத்துனுர்ச்சி கிடைக்கும். வரலாற்றிலும் இதிகாசத்திலும் இங்கே பல ஞானிகள், முனிவர்கள், சிவ அடியார்கள், சித்தர்கள் குளித்து தவம் புரிந்ததாக சொல்லப்பட்டுள்ளது, அது உண்மையாகவும் இருக்கலாம் இடம் பார்க்க அப்படித்தான் இருக்கிறது.

     பெண்கள் குளித்துவிட்டு உடைமாற்ற இரண்டு இடத்தில் தடுப்புகள் போல அமைப்புகள் உள்ளன, ஆண்கள் படிகளில் நின்று மாற்றிக்கொள்ளலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை பெண்கள் தங்கள் வந்த சுற்றுலா வாகனத்தின் திரைச்சீலை இறக்கிவிட்டு தங்கள் உடைகளை மாற்றிக்கொள்வது நல்லது. சிலர் புகைப்படம் எடுக்கும் சாக்கில் இரசியமாக நீங்கள் உடை மாற்றுவதை படம் பிடிக்க வாய்ப்புகள் அதிகம் எச்சரிக்கைத் தேவை. கண்டிப்பாக சனிக்கிழமை, ஞாயிறுக்கிழமையில் செல்வதை தவிர்த்துவிடுங்கள் கூட்டம் சற்று அதிகமாக இருக்கும் சரியாகவும் அதிகநேரம் அருவியில் குளிக்க முடியாமல் போகலாம். அதனால் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரைக்குள் போவதுபோல் இருந்தால் நல்லது. இங்கே குளித்தபின்னர் நிச்சியமாக ஒரு புத்துணர்ச்சியுடன் இருபிர்கள்.

குறிப்பு :

  1. வார இறுதி நாட்களில் இங்கே செல்வதை தவிர்த்துவிடுங்கள்.
  2. சோப்பு ஷாம்பூ தயவுசெய்து பயன்படுத்தவேண்டாம்.
  3. பெண்கள் சுற்றுலா வாகனத்திலேயே உடை மாற்றுவது நல்லது.

No comments:

Post a Comment