ஆம் நீங்கள் படித்த
தலைப்பு சரிதான், ATM ல் பணம் திருட ஒரு மொபைல் SMS போதுமானது. நம் அனைவருக்கும்
தெரியும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது பாதுகாப்பு சேவையை Wndows XPக்கு கடந்த
ஏப்ரல் 8ஆம் தேதியோடு
நிறுத்திக்கொண்டது. தற்போதுள்ள நிலவரப்படி உலகில் 96% ATM கள் Wndows XP யில் தான்
செயல்படுகிறது. ஆனாலும் நிறுவனங்களின் பாதுகாப்பு கருதி முக்கியமான பாதுகாப்பு
சேவையை தொடர்ந்து தருகிறது மைக்ரோசாப்ட் நிறுவனம்.
Wndows XPயில்
இயங்கும் ATMல் திருட்டு
இணைய பாதுகாப்பு
ஆராய்ச்சி நிறுவனம் Symantec ஒரு அதிர்ச்சி தரும் அறிக்கையைத் தந்துள்ளது. Windows
XPயில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக ATM ல் பணம் திருட வாய்புகள் அதிகம்
எனத் தெரிவித்துள்ளது. இந்த குறைபாடானது ஒரே ஒரு SMS வழியாக ATMல் இருந்து பணம்
எடுக்க வலிவகைசெய்கிறது.
Ploutus Malware செயலி
இணையத்திருடர்கள்
இந்த Ploutus Malware செயலியை பயன்படுத்திக்கொண்டு Windows XPயில் இயங்கும் ATMல்
சாதாரணமாகவே பணத்தை எடுக்கலாம் (திருடலாம்). இந்த வகை திருட்டு உலகெங்கிலும்
சாதாரணமாகவே நடக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2013ல் Backdoor என்ற செயலியை
கண்டுபிடித்தனர். மேலும் Ploutus செயலியானது மெக்ஸிகோவில் உள்ள ஒரு ATMல்
பதிந்துவைத்து வெறும் மொபைலில் இருந்து ஒரே ஒரு SMS மட்டும் அனுப்பி பணத்தை
திருடியதை கண்டுபிடித்தனர்.
இந்த திருட்டு
எப்படி சாத்தியம்
திருடர்கள் ATM
இயந்திரத்தில் உள்ள USB Portஐ மொபைல் உடன் இணைத்து தகவல் தொடர்பை
ஏற்படுத்துகிறார்கள். பின் அந்த மொபைல் வழியாக இணையத் இணைந்து சில கட்டளைகளை ATM
இயந்திரத்திற்கு SMS வழியாக அனுப்புகிறார்கள். பின்பு குறிபிட்ட அளவு பணம் தானாகவே
வெளியேவரும்.
கவனம் தேவை
இனிமேல் நீங்கள்
ATMல் பணம் எடுக்க செல்லும்போது இயந்திரத்தில் ஏதாவது வித்தியாசமான முறையில்
ஒயர்கள் இணைக்கப்படிருந்தால் உடனே காவலாளியிடம் விபரம் கேளுங்கள். உங்களுக்கு
அவரின் பதிலில் திருப்தி இல்லையென்றால் பணம் எடுக்காதீர்கள். சம்பந்தப்பட்ட
வங்கிக்கிளைக்கு உங்கள் சந்தேகத்தை தெரியப்படுத்துங்கள்.
No comments:
Post a Comment