Friday 14 November 2014

குழந்தைகள் தின சிறப்பு கவிதைகள்


(Image imgarcade)

இந்தியாவில் எங்களைப் போலியோவிளிருந்து
காப்பாற்றிவிட்டார்கள் காம பிசாசுகளிடம் மாட்டிகொண்டோம்
ஊனமுற்றோருக்கு சிகப்பு விளக்கு பகுதியில்
இடம் மறுக்கப்படுகிறதாம்...

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமாம்
அட குருட்டு இறைவா,
மூன்று வயதில் யாருக்கு என்ன துரோகம் செய்தேன்
இப்போதே என் கர்ப்பை இழந்து நிற்கிறேன்...

நான் வயதுக்கும் வரவில்லை,
எனக்கு கற்ப பையும் வளரவில்லை
அதற்குள் என் மார்பையும், பிறப்பிருப்பையும்
இப்போதே தடவித்தான் பேசுகிறான் என் பக்கத்து வீட்டுக்காரன்...

இந்தியாவில் பெண்கள் தெய்வத்திற்கு நிகராம்
அட ஆண்டவா,
தெய்வத்தையே கற்பழித்த பெருமை
இந்தியர்களுக்கே சேரட்டும் – நாசமாய் போங்கள்...

அட கிறுக்கு பாரதி
நீ இப்போது உயிரோடு இருந்திருந்தால்
மாதராய் பிறப்பதற்கு முன் ஜென்மத்தில்
என்ன பாவம் செய்தீர்களோ அம்மா
என்று படிருப்பாய்...


கவிதைகளுக்கு நன்றி திரு.இராஜேஸ் ராவ்

No comments:

Post a Comment