Wednesday, 5 November 2014

புற்றுநோய்க்கு இலவச ஆலோசனை பெற

புற்றுநோய்க்கு இலவச ஆலோசனை பெற




உலகில் புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகள் மட்டும் 13 சதவீதம் என்கிறது ஒரு புள்ளிவிவரம். உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பயனுள்ள தகவல்களை அமெரிக்கப் புற்றுநோய் அமைப்பின் (American Cancer Society) இணையதளம் வழங்குகிறது. இந்த இணையதளத்தில் புற்றுநோய் அடிப்படைகள் (Cancer Basics) எனும் தலைப்பில் கிளிக் செய்தால், புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது?, மார்பகப் புற்றுநோய், பெருங்குடல்/மலக்குடல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், தோல் புற்றுநோய், ஆண்மைச்சுரப்பிப் புற்றுநோய் என அனைத்து வகைப் புற்றுநோய்கள், செய்திகள், சிறப்புக்கூறுகள், புற்றுநோய் சொற்களஞ்சியம் ஆகிய துணைத் தலைப்புகளில் புற்றுநோய் குறித்த பல்வேறு தகவல்கள் தரப்பட்டுள்ளன.
அனைத்து வகைப் புற்றுநோய்கள் எனும் துணைத் தலைப்பில் கிளிக் செய்தால் ஆங்கில எழுத்துகளின் அகரவரிசையில் அனைத்து வகை புற்றுநோய்களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அந்தந்தப் புற்றுநோய் குறித்த தகவல்கள், காரணங்கள், ஆபத்துக் காரணிகள் (Causes and Risk Factors), சிகிச்சை, உதவிகள், ஆய்வு விளக்கம், நம்பிக்கை நிகழ்வுகள், செய்திகள் போன்றவற்றை அறிந்துகொள்ள முடிகிறது.

புற்றுநோய் தடுப்பு மற்றும் கண்டறிதல் (Cancer Prevention & Detection) எனும் தலைப்பில் கிளிக் செய்தால் புகையிலையிலிருந்து ஒதுங்கியிருத்தல், ஆரோக்கியமான உணவு உண்பது, செயலாற்றல் பெறுவது, சூரியனிடமிருந்து பாதுகாப்பாக இருப்பது, புற்றுநோயைத் தொடக்கத்தில் கண்டறிவது, மாற்று வழிகளில் பாதுகாத்துக் கொள்வது, கருவிகள், கணக்கீட்டு கருவிகள், உடல்நல வல்லுநர்களின் தகவல்கள் போன்ற துணைத்தலைப்புகளில் தகவல்கள் தரப்பட்டுள்ளன.
புற்றுநோய் சமிக்ஞைகள், அறிகுறிகள் (Signs & Symptoms of Cancer) எனும் தலைப்பில் கிளிக் செய்தால், உடலில் புற்றுநோய் இருப்பதைக் கண்டறிவதற்கான பல்வேறு அறிகுறிகள் குறித்த தகவல்கள் உள்ளன.

சிகிச்சை, பக்கவிளைவுகள் (Treatments & Side Effects) எனும் தலைப்பில் கிளிக் செய்தால், நோய் கண்டறிதலும் சிகிச்சையும், சிகிச்சையின் பக்கவிளைவுகள், குழந்தைகளும் புற்றுநோயும், பராமரிப்பு, வாழ்வின் இறுதியை நெருங்குதல் போன்ற துணைத் தலைப்புகளில் தகவல்கள் உள்ளன.

இதுபோல், புற்றுநோய் உண்மைகளும் புள்ளிவிவரமும் (Cancer Facts & Statistics), புற்றுநோய் செய்திகள் (News About Cancer), வல்லுநர் கருத்துகளின் வலைப்பதிவு (Expert Voices Blog) எனும் தலைப்புகளின் கீழ் புற்றுநோய் தொடர்புடைய முக்கியத் தகவல்கள் தரப்பட்டுள்ளன.

புற்றுநோய் குறித்த பல்வேறு விவரங்களை அளிக்கும் இந்த இணையதளத்தைப் பார்க்க:http://www.cancer.org/

உதவிகரமான மருத்துவ செய்திகளுக்கு இந்த சுட்டியில் சென்று பார்க்கவும்


For more helpful medical related posts, please click this link

No comments:

Post a Comment