Monday 10 November 2014

மைக்ரோசாப்ட் வழங்கும் இலவச இன்டர்நெட்



மைக்ரோசாப்ட் நிறுவனம் சார்பில் இந்தியாவில் இலவச இன்டர்நெட் சேவை தொடங்க முயற்சிகள் நடந்துகொண்டிருக்கிறது. உலகின் முன்னணியில் உள்ள google , facebook போன்ற நிறுவனங்கள் தங்களால் முடிந்த வரை உலகில் இன்டர்நெட் சேவையை விரிவுபடுத்த பெரும் முயற்சிகள் எடுத்து வருகிறார்கள். அது போல இப்போது மைக்ரோசாப்ட் நிறுவனமும் தன் பங்கிற்கு வேலையை செய்ய ஆரம்பித்துள்ளது.

அதாவது ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட அலைகற்றையில்(bandwidth) பயன்படுத்தாமல் இருக்கும் அலைகற்றைகளை “white space” என்பர். இது போன்ற பயன்படுத்தாமல் இருக்கும் அலைகற்றைகளை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள மிகவும் பின்தங்கியுள்ள கிராமங்களை இன்டர்நெட் மூலமாக இணைக்கலாம் என்ற நோக்கில் இந்திய அரசை அணுகியுள்ளது. இந்திய அரசும் இதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் தெரிகிறது.


“கம்பியில்லா இணைப்புகள் 100 மீட்டர் வரை சேவை தரமுடியும் அதுவே 200-300 MHz அலைகற்றையில் சுமார் 10 கி.மி தூரம் சேவை தரமுடியும், மேலும் தற்போது தூர்தர்ஷன் வசம் உள்ள குறிப்பிட்ட அலைகற்றை இதுவரை பயன்படுத்தாமல் உள்ளது இதை பயன்படுத்தி 2 மாவட்டத்தில் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என்று இந்தியாவுக்கான மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் திரு. பாஸ்கர் ப்ரமணிக் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்

No comments:

Post a Comment