Saturday 15 November 2014

இந்தயாவில் இயற்கையின் அதிசியங்கள்

இந்தியா அதிசியங்களும் ஆச்சர்யம் நிறைந்த நாடு என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து வாய்புகள் இருக்காது அதற்கு இந்த புகைப்படங்கள்தான் சாட்சிகள்

இயற்கையான சுடுநீர் மணிகரன்

(Image Credits for original Photographers)

இது பார்வதி பள்ளத்தாக்கு மற்றும் பார்வதி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது, இந்த இடம் ஹிமாச்சல் பிரதேசத்தில் குல்லு மாவட்டத்தில் இருக்கிறது. இந்த சுடுநீர் மிகவும் வெப்பமாகவும் நெருங்க முடியாதவையாகும்.

போரா குகைகள் விசாகப்பட்டினம்

(Image Credits for original Photographers)

இந்த குகைகள்தான் இந்தியாவிலேயே மிகவும் பெரியது, போரா குகைகள் அரக்கு பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இந்த குகையின் உள்ளே சென்று பார்த்தால் கற்கள் மனித மூளைகள் போல் காட்சி தரும். 

பூக்களின் பள்ளத்தாக்கு

(Image Credits for original Photographers)

இது உத்தரகாண்டில் உள்ள தேசிய பூங்கா, இங்கே மெய்சிலிர்க்க வைக்கும் பூக்கள் பூத்து குலுங்கும் பார்க்கவே இரம்யமாக இருக்கும், இங்கே எல்லா வகையான வன விலங்குகளும் வாழ்கின்றன. 

பனி லிங்கம் அமர்நாத்

(Image Credits for original Photographers)

இந்த பனி லிங்க கோவில் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ளது, ஹிந்து மதத்தின் மிகவும் புனித இடமாக கருதப்படுகிறது.
இந்த பனி லிங்கமானது அமர்நாத் பள்ளத்தாக்கில் 130 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மேலும் இந்த பள்ளத்தாக்கு 5௦௦௦ வருடங்கள் பழைமை வாய்ந்தவையாக கருதப்படுகிறது.

அசையா பாறை மகாபள்ளிபுரம்

(Image Credits for original Photographers)

இது தமிழ்நாட்டில் மகாபள்ளிபுரத்தில் அமைந்துள்ளது, தமிழகத்தின் முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்று. இந்த பாறையை ஆங்கிலத்தில் " balancing rock " அல்லது " Butter ball " என்று சொல்வார்கள். அதிசியம் என்ன என்றால் இது 45 கோணத்தில் சாய்ந்து இருக்கும் இந்த பாறை, இது இயற்கைக்கு சற்று மாறானது.

No comments:

Post a Comment