Monday 10 November 2014

ரஜினியின் லிங்காவை ரூ 165 கோடிக்கு வாங்கியது ஈராஸ்





ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ள, ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கும் லிங்கா படத்தை ரூ 165 கோடிக்கு வாங்கியது ஈராஸ் நிறுவனம். இந்தியாவில் இவ்வளவு பெரிய தொகைக்கு விற்கப்பட்ட முதல் திரைப்படம் லிங்கா ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 

பொதுவாக பெரிய பட்ஜெட் படங்களை, அவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்களே வெளியிடுவது வழக்கம். எந்திரன் படம் கூட சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் ஏரியாவாரியாக விற்கப்பட்டது. வெளிநாடுகளில் வெவ்வேறு நிறுவனங்கள் வெளியிட்டன. ஆமீர்கான், ஷாரூக்கான் படங்களின் நிலையும் இதேதான்.

முதல் முறையாக ரஜினியின் படமான லிங்கா படத்தை ரூ 165 கோடி எனும் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளது ஈராஸ் நிறுவனம். இந்திய சினிமா வரலாற்றில் எந்தப் படமும் இந்த விலைக்கு விற்கப்பட்டதில்லை. 


இதுவரை எந்த இந்தியப் படமும் வெளியாகாத அளவுக்கு அதிக அளவு அரங்குகளில் வெளியிட ஈராஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வெளிநாடுகளில் லிங்காவை வெளியிடும் உரிமை ஈராஸின் கூட்டாளியான அய்ங்கரனுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.

No comments:

Post a Comment