மழைக்கால
நோய்களை சமாளிப்பது எப்படி?
மழைக்காலம்
தொடங்கிவிட்டால் போதும் ஜலதோஷம், சளி, இருமல்,
காய்ச்சல், உடல்வலி என நோய்களின் பாதிப்புகள்
வரிசையில் வந்து நிற்கும். தமிழகத்தில் நகரம், கிராமம் எனப்
பாகுபாடு இல்லாமல், தெரு சுத்தமும், பாதை
சீரமைப்பும், சாலைப் பராமரிப்பும் சரியில்லாத காரணத்தால்,
மழைத் தண்ணீர் வடிய வழியின்றித் தெருவெல்லாம் குளமாகிவிடுகிறது. இதனால்
சுற்றுப்புறம் மாசடைந்து, குடிநீரும் தெருநீரும் கலந்து நோய்க்கிருமிகள் வாழ
வழியேற்படும். விளைவு வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு,
காலரா, சீதபேதி, டைபாய்டு,
மஞ்சள்காமாலை என்று பல தொற்றுநோய்கள் நம்மைப் பாதிக்கத்
தொடங்கிவிடும். பருவநிலை
மாறும்போது, அதுவரை உறக்க நிலையில் இருந்த பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் விழித்தெழுந்து, வீரியம்
பெற்று மக்களைத் தாக்கத் தயாராகின்றன. மழையில் நனைகிறபோது இந்தக் கிருமிகள்
நமக்குப் பரவப் பொருத்தமான சூழல் உருவாகிறது. அப்போது
நம்மிடையே ஊட்டச்சத்து குறைந்தவர்கள், நோய்
எதிர்ப்புச்சக்தி குறைந்தவர்கள் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால்தான்
மழைக்காலத்தில் நோயால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
வைரஸ்
காய்ச்சல்
மழைக்காலத்தில்
பரவுகிற காய்ச்சல்களில் முதன்மையானது, ஃபுளூ
காய்ச்சல். இது ஒன்றுக்கு மேற்பட்ட வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. நோயாளி
தும்மும்போதும் இருமும்போதும் மூக்கைச் சிந்தும்போதும் இந்தக் கிருமி சளியோடு
வெளியேறி, அடுத்தவர்களுக்கும் பரவுகிறது. கடுமையான காய்ச்சல்,
தலைவலி, உடல்வலி, கை
கால்வலி. தும்மல், மூக்கு ஒழுகுதல், சளி,
இருமல், தொண்டை வலி போன்றவை இதன் அறிகுறிகள். இந்தக்
காய்ச்சலுக்குச் சிறப்புச் சிகிச்சை எதுவும் கிடையாது. காய்ச்சலைக் குறைக்க ‘பாராசிட்டமால்' மாத்திரை உதவும். தும்மல், மூக்கு ஒழுகுதல் அவஸ்தைகளைக் கட்டுப்படுத்த ‘ஹிஸ்டமின்
எதிர்ப்பு மருந்துகள்' பலன் தரும். ஒரு வாரத்தில் இது தானாகவே
சரியாகிவிடும். குழந்தைகளுக்கு
வைரஸ் காய்ச்சல் வந்தால், வலிப்பு வந்துவிடலாம். எனவே, உடனடியாகக் காய்ச்சலைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளைப்
பள்ளிக்கு அனுப்பாமல் ஓய்வு எடுக்கச் சொல்ல வேண்டும். திரவ
உணவுகளை அடிக்கடி கொடுக்க வேண்டும். சுத்தமான குடிநீரைத் தரவேண்டியது அவசியம்.
காய்ச்சல் அதிகமாக இருந்தால், சாதாரணத் தண்ணீரில் துண்டை
நனைத்துப் பிழிந்து குழந்தையின் உடல் முழுவதும் விரிக்க வேண்டும்.
நிமோனியா
காய்ச்சல்
பாக்டீரியா
அல்லது வைரஸ் கிருமிகள் நுரையீரலைப் பாதிப்பதால் வரக்கூடியது, நிமோனியா காய்ச்சல். கடுமையான காய்ச்சல், தலைவலி,
தசைவலியில் தொடங்கி, இருமல், சளி, சளியில் ரத்தம், நெஞ்சுவலி,
மூச்சு வாங்குதல் எனத் தொல்லைகள் அதிகரிக்கும். ஆரம்ப நிலையில்
தகுந்த ஆன்ட்டிபயாடிக்குகள் மூலம் இதற்குச் சிகிச்சை பெற்றுக்கொண்டால், நோய் முழுமையாகக் குணமாகிவிடும். இல்லையென்றால்
இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட பல உறுப்புகளைப் பாதித்து
உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். இது பெரும்பாலும் குழந்தைகளையும்
முதியவர்களையும்தான் அதிகமாகப் பாதிக்கும். இதைத் தடுப்பதற்கும் தடுப்பூசி உள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் போட்டுக்கொள்ளலாம்.
வயிற்றுப்போக்கு, காலரா
மாசடைந்த
குடிநீர், அசுத்த உணவு மூலம் ரோட்டா வைரஸ்கள் நமக்குப்
பரவுவதால் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. இதேபோல் பாக்டீரியாக்கள் மூலம் காலரா
ஏற்படுகிறது. ஈக்களும் எறும்புகளும் இந்தக் கிருமிகளைப் பரப்புகின்றன. நோயாளியின்
உடல் இழந்த நீரிழப்பைச் சரி செய்வதே இதற்குத் தரப்படும் சிகிச்சையின் நோக்கம்.
எனவே, பாதிக்கப்பட்டவருக்குச் சுத்தமான குடிநீரை
அடிக்கடி கொடுக்க வேண்டும். உப்பும் சர்க்கரையும் கலந்த தண்ணீர் அல்லது ‘எலெக்ட்ரால்' பவுடர் தரலாம்.
சீதபேதி
அமீபா, சிகெல்லா, ஜியார்டியா போன்ற கிருமிகள் நம்மைப்
பாதிக்கும்போது சீதபேதி வரும். தெருக்களில், திறந்தவெளிகளில்,
குளத்தின் ஓரங்களில் மலம் கழிக்கும்போது மலத்தில் இருக்கின்ற
கிருமிகளின் முட்டைகள், மழைக்காலத்தில் சாக்கடைநீர், குடிநீரில் கலந்து தொற்றிவிடும்போது, சீதபேதி
ஏற்படும். காய்ச்சல், அடிவயிற்று வலி, வாந்தி,
மலத்தில் சீதமும் ரத்தமும் கலந்து போவது போன்றவை இதன் அறிகுறிகள்.
இதற்கு மருத்துவரின் ஆலோ சனைப்படி சிகிச்சை தேவை.
மஞ்சள்
காமாலை
குடிநீர், உணவு மாசு மூலம் ‘ஹெபடைட்டிஸ்-ஏ' வைரஸ்கள் தாக்கும்போது மஞ்சள் காமாலை வரும். பசியின்மை, காய்ச்சல், குளிர் நடுக்கம், வயிற்றுவலி,
வாந்தி, சிறுநீர் மஞ்சள் நிறத்தில் போவது,
கண் மஞ்சள் நிறத்தில் காணப்படுவது போன்றவை இதன் அறிகுறிகள்.
சுத்தமான
குடிநீரைப் பருகுவது, மாவுச் சத்துள்ள உணவு வகைகளை அதிகமாக உண்பது,
எண்ணெய் - கொழுப்பு உணவு வகைகளைத் தவிர்ப்பது ஆகியவை இந்த நோயைக்
குணப்படுத்தும்.
இந்த
நோய்க்கும் தடுப்பூசி உள்ளது. குழந்தைக்கு ஒரு வயது முடிந்ததும் ஒரு முறை, அடுத்து ஓராண்டு கழித்து ஒரு முறை என இரண்டு தவணைகள் இந்தத் தடுப்பூசியைப்
போட்டுக்கொள்ள வேண்டும்.
டைபாய்டு
காய்ச்சல்
‘சால்மோனெல்லா டைபை' ( Salmonella typhi ) எனும்
பாக்டீரியாவால் இது வருகிறது. இந்தக் கிருமிகளும் அசுத்தமான குடிநீர், உணவு மூலம்தான் பரவுகின்றன. முதலில் காய்ச்சல், தலைவலி,
உடல்வலியுடன் நோய் தொடங்கும். ஒவ்வொரு நாளும் காய்ச்சல் படிப்படியாக
அதிகரிக்கும்.
பசி
குறையும். குமட்டல், வாந்தி, வயிற்றுவலி போன்றவை
தொல்லை தரும், உடல் சோர்வடையும். இதைக் குணப்படுத்தப் பல
நவீன மருந்துகள் உள்ளன. இதைக்
கவனிக்கத் தவறினால் குடலில் ரத்தக்கசிவு, குடலில் துளை
விழுதல், பித்தப்பை அழற்சி போன்ற கடுமையான விளைவுகள்
உண்டாகும். உணவுச் சுத்தம், குடிநீர்ச் சுத்தம் இந்தக்
காய்ச்சலைத் தடுக்க உதவும். இந்த நோய்க்கும் தடுப்பூசி உள்ளது. ஒருமுறை இதைப்
போட்டுக்கொண்டால் மூன்று வருடங் களுக்கு டைபாய்டு காய்ச்சல் வராது.
எலி
காய்ச்சல்
மழைக்காலத்தில்
வீட்டைச் சுற்றிலும் தெருக்களிலும் தண்ணீர் தேங்கும்போது, எலி, பெருச்சாளி போன்றவற்றின் சிறுநீர்க் கழிவும்
அதில் கலக்கும். அந்தக் கழிவுகளில் ‘லெப்டோஸ்பைரா' எனும் கிருமிகள் இருந்தால் எலி காய்ச்சல் (Leptospirosis) வரும். கடுமையான
தலைவலி, காய்ச்சல், தொட்டாலே தாங்க
முடியாத தசைவலி, உடல்வலி, மஞ்சள்
காமாலை, கண்களில் ரத்தக்கசிவு, சிறுநீரிலும்
மலத்திலும் ரத்தம் போவது போன்றவை இதன் முக்கிய அறிகுறிகள். இந்த நோய்க்கும் பல
நவீன மருந்துகள் உள்ளன. மழைக்காலத்தில்
வீட்டைச் சுற்றிலும் தெருக்களிலும் தண்ணீர் தேங்கும்போது, எலி, பெருச்சாளி போன்றவற்றின் சிறுநீர்க் கழிவும்
அதில் கலக்கும். அந்தக் கழிவுகளில் ‘லெப்டோஸ்பைரா' எனும் கிருமிகள் இருந்தால் எலி காய்ச்சல் (Leptospirosis) வரும்.
கடுமையான
தலைவலி, காய்ச்சல், தொட்டாலே தாங்க
முடியாத தசைவலி, உடல்வலி, மஞ்சள்
காமாலை, கண்களில் ரத்தக்கசிவு, சிறுநீரிலும்
மலத்திலும் ரத்தம் போவது போன்றவை இதன் முக்கிய அறிகுறிகள். இந்த நோய்க்கும் பல நவீன
மருந்துகள் உள்ளன.
கொசு
நோய்கள்
மழைக்காலத்தில்
தெருவில் தண்ணீர் தேங்குவதால் கொசுக்களின் ஆதிக்கம் பெருகுகிறது. அப்போது மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா போன்றவை ஏற்படுகின்றன.
விட்டுவிட்டுக் குளிர்காய்ச்சல் வந்தால் அது மலேரியாவாக இருக்கலாம். மூட்டுவலி
அதிகமாக இருந்தால் சிக்குன் குனியா. மூட்டு வலியுடன் உடலில் ரத்தக்கசிவும்
காணப்பட்டால், அது டெங்கு. கொசுக்களை ஒழித்தால்தான் இந்த
நோய்களைத் தடுக்க முடியும். அதுவரை வீட்டு ஜன்னல், படுக்கையைச்
சுற்றிக் கொசுவலையைக் கட்டி சமாளிக்க வேண்டியதுதான்.
No comments:
Post a Comment