Tuesday 23 December 2014

அடிமைத்தனத்தில் இந்தியர்களை மிஞ்ச யாருமே இல்லையாம்!

(Image uknowkids)

ஆம் நீங்கள் படித்த தலைப்பு 100% உண்மைதான் மக்களே!, இந்தியாவிற்கு ஸ்மார்ட்போன்(Smartphone) வந்து முழுதாக ஐந்து வருடங்கள் கூட ஆகவில்லை அதற்குள்ளேயே இந்தியர்களால் ஸ்மார்ட்போன் இல்லாமல் இருக்கமுடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் என்று சமிபத்தில் நடந்த ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒரு காலத்தில் தொலைக்காட்சி

1980 – 1990 இந்த இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களுக்கு தொலைக்காட்சிதான் மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சமாக இருந்ததது என்பதை யாராலும் மறுக்க முடியாது. “சக்திமான்” தொடரைப் பார்த்து குழந்தைகள் சக்திமான் எங்களை காப்பாற்றிவிடுவார் என்று வீட்டில் மேலிருந்து குதித்தவர்கள் எத்தனையோ..!

இப்போது இணையத்துடன் ஸ்மார்ட்போன்

நமது இந்தியாவிற்கு இந்த ஸ்மார்ட்போன் வந்து ஐந்து வருடங்கள் கூட இன்னும் ஆகவில்லை அதற்குள்ளேயே 57% மக்களால் இணையத்துடன் கூடிய ஸ்மார்ட்போன் இல்லாமல் எங்களால் இருக்கா முடியாது என்று கூறியிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. தொலைக்காட்சி பார்க்காமல் கூட இருந்துவிடலாம் ஆனால் ஸ்மார்ட்போன் இல்லாமல் இருக்க முடியாமல் இந்தியர்கள் தவிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

நன்றி
திரு. க.ராஜேஷ் ராவ்

http://badwriterintamil.blogspot.in/2014/12/indians-57-percent-smartphone-addict.html

No comments:

Post a Comment