Wednesday, 24 December 2014

KB என்ற ஒரு சகாப்தம்


KB என்று செல்லமாக அழைக்கப்படும் திரு கைலாசம் பாலச்சந்தர் என்ற கலங்கரை விளக்கு ஜூலை 9ஆம் தேதி 1930 ஆம் ஆண்டு தஞ்சாவூர் நன்னிலத்தில் பிறந்து தனது 84 வயது வரை தன்னால் முடிந்தவரையில் திக்கு தெரியாமல் இருந்தவர்களை கரையேற்றிவிட்டர்வர். இதோ இன்று 23ஆம் தேதி டிசம்பர் மாதம் 2014 நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்தார்.

KB யால் வாழ்க்கை பெற்றவர்கள்

இன்று உச்சத்தில் இருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் முதல் நிறைய திறமையான நடிகர், நடிகைகள் என்று ஏராளமானவர்களை இவர் அறிமுகப்படுத்தினார்.

முதல்படம் நீர்க்குமுழி

எந்த இயக்குனரும் முதல் படத்தை ஜனரஞ்சகமாக எடுத்து தன்னை நிலைநிறுத்த முயற்சி செய்யும் சமயத்தில் இவர் நகைச்சுவை நடிகர் “நாகேஷ்” ஐ கதாநாயகனாக வைத்து “நீர்க்குமுழி” என்ற படத்தை கொடுத்து தன்னை நிலைநிறுத்தினார்.

புதுமுகம்

இவர் படத்தில் பெரும்பாலான கதாப்பாத்திரம் புதுமுகங்கள்தான் ஃபடாஃபட் ஜெயலட்சுமி, ஸ்ரீபிரியா விஜயகுமார், ஜெய்கணேஷ்  டெல்லி கணேஷ், சிவச்சந்திரன். பிற மொழியிலிருந்தும் சிலரை தமிழில் அறிமுகப்படுத்தியவர்களில்  சுஜாதா (அவள் ஒரு தொடர்கதை),ஷோபா (நிழல் நிஜமாகிறது), சரத்பாபு (நிழல் நிஜமாகிறது), சரிதா (தப்புத்தாளங்கள்), பிரகாஷ்ராஜ் (கல்கி) போன்றவர்கள் முக்கியமாணர்வர்கள். மேலும் எஸ். வி. சேகர் (வறுமையின் நிறம் சிகப்பு) மற்றும் மௌலி (நிழல் நிஜமாகிறது) ஒய். ஜி. மகேந்திரன் (நவக்கிரகம்) மற்றும் காத்தாடி இராமமூர்த்தி (பட்டினப்பிரவேசம்) என, முன்னரே நாடக மேடையில் புகழ் பெற்றிருந்த சிலரை திரைக்கு பாலச்சந்தர் அறிமுகப்படுத்தினார். பாலச்சந்தரின் பல படங்களில் நடித்திருந்த மேஜர் சுந்தரராஜன் (மேஜர் சந்திரகாந்த்) இவ்வாறு அறிமுகமானவரே. அவரது இடுபெயரான மேஜர் என்பது இப்படத்திலிருந்தே கிடைத்தது. எம். ஆர். ராதாவின் மகன் ராதாரவியை அறிமுகப்படுத்தியவர் இவரே.

அசாதாரணமான திறமை

உறவு முறைகளில் உள்ள சிக்கல் பற்றிய திரைப்படம் எடுக்க ஒரு அசாதாரணமான திறமை வேண்டும் அந்த திறமை பாலச்சந்தர் அவர்களுக்கு சற்று அதிகம் என்றுதான் சொல்லவேண்டும் ஏனென்றாள் அவர் தொட்ட கதை களங்கள் கதியின்மேல் நடப்பதாக இருக்கும். ஆனாலும் அதை லாவகமாக கையாண்டுள்ளார் என்றால் அது மிகையாகாது. யாருக்கு என்ன(நடிப்பு) வரும், வராது என்று நன்றாகவேத் தெரிந்தவர். அதற்கு மிகச்சிறந்த உதாரணம்தான் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். பாலச்சந்தர் கையில் இருந்தவரையில் ரஜினிக்கு இந்த அளவிற்கு நடிக்க வருமா என்று எல்லோரையும் ஆச்சர்யப்படும் வகையில் ரஜினியைப் பயன்படுத்தியிருக்கிறார். ரஜினி என்ற ஒருவரின் உள்ளே ஒரு மிகச்சிறந்த நடிகன் இருந்ததையே குழிதோண்டி புதைத்த பெருமை நம்மையே சேரும். மறுமுனையில் கமல்ஹாசன் நன்றாக வைரம் போன்று பட்டை தீட்டப்பட்டதும் பாலச்சந்தர் என்ற மாமனிதரால்தான்.

தற்போதைய முதுகெலும்பு இல்லாத இயக்குனர்கள்

இன்று உள்ள இயக்குனர்கள் யாருக்குமே பாலச்சந்தர் அவர்களுக்கு அன்று இருந்த துணிச்சல் இன்றுகூட இல்லை என்று சொன்னால் அது மிகையாகாது சினிமா ஆர்வலர்களுக்கு இது நன்றாகவேத் தெரியும்.

வாழும்போது ஒருவரைப் பற்றி உயர்வாகப் பேசுவதென்பது பெரிய விஷயம் இல்லை மறைந்த பின்பும் பேசவைப்பர்கள்தான் உண்மையான சாதனையை செய்தவர்கள். அந்தவகையில் நீங்கள் சாதனையாளர். உங்கள் மறைவு ஒட்டுமொத்த இந்திய திரைஉலகிர்க்கே ஈடு செய்யமுடியாத இழப்பு என்பதுதான் நிதர்சனம். இப்படிக்கு OnlineArasan குழு.

No comments:

Post a Comment