Thursday 8 January 2015

லிங்காவை சுற்றிய நஞ்சுப்பாம்புகள்



இந்த பதிவு நிச்சயமாக நடிகர் ரஜினிகாந்திற்கும், வேந்தர் மூவீஸ், ஈரோஸ், ராக்லைன் போன்ற யாருக்கும் வக்காலத்து வாங்க பதியவில்லை.

லிங்கா திரைப்படம் நஷ்டம் என்றால் யாருமே நம்பக்கூட மாட்டார்கள். ஏனென்றால் அந்த அளவுக்கு தியேட்டர்களில் வசூல் கொள்ளையே நடந்தது. 12/12/14 அன்று அதிகாலையில் 12மணிக்கே முதல் காட்சியை பெரும்பாலான திரையரங்க நிர்வாகம் காட்ட ஆரம்பித்துவிட்டது. முதல் நாள் இரவு 9 மணிக்கே டிக்கெட்டிற்கு 300 முதல் 500 வரை வசூலித்தார்கள். இது இப்போது நஷ்டம் சொல்கின்ற தஞ்சாவூர் மற்றும் திருச்சி பகுதிகளில் நடந்தவை. அப்படியன்றால் 12 மணி காட்சிக்கு எவ்வளவு பிடுங்கியிருக்கலாம் என்று நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள் மேலும் அப்போது படம் பார்த்த ரசிகர்களுக்கு நன்றாகவேத் தெரியும்.

நான்கு நாட்களில் நான்கு கோடி நஷ்டம் என்ற பொய்

சரி எட்டு கோடி கொடுத்து வாங்கிய படம் நான்கு நாட்களில் நான்கு கோடி சம்பாரித்துவிட்டது என்றுதானே அர்த்தம். அப்படி பார்த்தால்கூட இத்தனை நாட்களில் எட்டு கோடியை விடவும் அதிகம் வசூல் வந்திருக்குமே அதைப்பற்றி ஏன் மூச்சே அவர் விடமறுக்கிறார். நான்கு நாட்களில் நான்கு கோடி வசூலுக்கு அரசுக்கு வருமானவரி முறையாக செலுத்தினரா? அதற்கு ஆவணங்கள் வைத்துள்ளாரா?

கன்னடத் தயாரிப்பாளர்கள் ஏன்?

அவர் கேட்கிறார் “கன்னடத் தயாரிபில் ஏன் நடித்தீர்கள்? அவர் ஏற்கனவே விக்ரம் நடித்த “மஜா” திரைப்படம் நஷ்டத்தையே தரவில்லை” என்று. சரி யோக்கியமானவர்களாக நீங்கள் இருந்தால் அவர் தயாரிப்பில் படம் வாங்கவேண்டும் என்றால் “மஜா” நஷ்டத்தை தரவேண்டும் என்று நீங்கள் ஏன் போராட்டம் நடத்தவில்லை?. கன்னடத் தயாரிப்பாளர்கள்! கன்னடத் தயாரிப்பாளர்கள்! என்று திரும்பத் திரும்ப கூறவேண்டிய அவசியம் என்ன? இதில் அரசியல் இருக்கிறது, அதாவது கன்னட அரசியல்.

ரஜினி ரசிகர்கள் யாரும் படம் பார்ப்பது இல்லை

“ரஜினி ரசிகர்கள் யாரும் படம் பார்ப்பது இல்லை” இதை அவரே அவர் வாயால் சொன்ன வார்த்தை. சரி பிறகு எதற்கு ரஜினி படத்தை வாங்கினீர்கள்? ரஜினி வந்து உங்கள் கனவில் மற்றும் நேரில் வந்து மிரட்டினாரா? அப்படி ஓடாத படத்தை நீங்கள் ஏன் வாங்கினீர்கள்? உங்களிடம் பணம் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம் அதை எப்படி சம்பாரித்தீர்கள்? அதற்கு முறையான ஆவணங்கள் உங்களிடம் உள்ளதா? உங்கள் வீடு அலுவலகம் போன்ற இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தலாமா? அதற்கு நீங்கள் தயாரா?

நாங்கள் இதற்கு புதுசு ஏமாற்றிவிட்டார்கள்

சினிமாத்துறையில் அனுபவமே இல்லாத நீங்கள் ஏன் படத்தை வாங்கவேண்டும்? அப்படி யார் உங்களை கட்டாயப் படுத்தி வாங்க வைத்தவர்கள் யார்?

சினிமா என்பது பொதுஜன ஊடகம் இதில் மிகவும் ஏற்றம் இருக்கும் அதேபோல் மிகவும் நஷ்டம் இருக்கும் இதைப்பற்றி அறிவுகூட இல்லாமல் எப்படி இந்த தொழிலில் அவர் இறங்கினார் என்று கடவுளுக்கே வெளிச்சம்!

இதில் நடிகர் ரஜினிகாந்த் தன் மௌனம் களைத்து இறங்கி உண்மை என்ன என்று காவல்துரையின் துணையுடன் தெரிவிக்கவேண்டும் என்று onlinearasan குழு சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.  

No comments:

Post a Comment