கணினி துறையில் மற்றுமொரு அங்கம்தான் இந்த Software
Testing. இந்த துறையில் சம்பளமானது Software Engineer ஐ விட சற்று குறைவாக
இருக்கும். ஒரு வேலை உங்களுக்கு C, C++, Java, C#, PHP போன்ற மொழிகள் உங்களுக்குத்
தெரியும் ஆனால் நிரல்களை(Program) எழுத முடியாது என்றால் இந்த துறையை
தேர்ந்தெடுக்கலாம் ஆனால் நிச்சயமாக உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட கணினி மொழியில்
எல்லா அம்சமும் தெரிந்திருக்கவேண்டும்.
Software Testing Team இல்லாத கணினி மென்பொருள் நிறுவனங்களே
இருக்க முடியாது. அவர்கள் தயாரிக்கும் எல்லா மென்பொருளும் சோதனை செய்யவேண்டும்
அதற்கு ஒரு குழு நிச்சியமாகத் தேவை. நமது கணினி மற்றும் செல்பேசிகளில்
பயன்படுத்தும் செயலிகளும்(Applications) சோதனைக்குழுக்களால் (Testing Team)
நூற்றுக்கணக்கான முறை சோதனை செய்யப்படும்.
பிறகுதான் நாம் பயன் படுத்தும் Beta வெர்சன்
வெளியிடப்படும். பயன்படுத்துபவர்கள் தரும் கருத்துக்கள் அடிப்படையில் மீண்டும் ஒரு
முறை மாற்றி அமைத்து முழு பதிப்பாக வெளியிடப்படுகிறது. இதற்கு நிறைய மனிதவளம்
தேவைப்படும்.
இந்த துறையிலும் சில முறைகள் உள்ளது. Manual Testing,
Automation Testing, Selenium என்று இன்னும் பல வகையான முறைகள் உள்ளது. இதில்
உங்கள் விருப்பம் என்ன என்று பார்த்து தேர்வு செய்து கற்றுக்கொண்டு வேலை தேட
முயற்சிக்கலாம். முடிந்தவரையில் படிக்கும்போதே ஒரு நல்ல Computer Center ல்
சேர்ந்து படித்தால் உங்கள் கல்லுரி படிப்பு முடிந்தவுடன் வேலையில் சேர்ந்துவிட
சரியாக இருக்கும் இல்லையென்றால் நேரம் வீணாகும் விவேகம் தேவை. கணினித்துறையைப்
பொறுத்த வரையில் சென்ற ஆண்டு படித்த மாணவர்களுக்கு இந்த வேலை கிடைப்பது சற்று
சிரமம்.
எனவே எத்தனை விரைவில் வேலை தேடகொள்ள முடியுமோ ஒரு வேலையில் அமர்ந்துவிட
வேண்டும். ஒரு வருடம் மேல் ஆகிவிட்டால் கணினி நிறுவனங்கள் உங்களை பரிசிலினை செய்ய
தயாராக இல்லை. எச்சரிக்கை!.
இந்த பதிவின் தொடர்ச்சி விரைவில்...
நன்றி
G.ராஜேஸ் ராவ் MCA.
My mobile number 8220963157
ReplyDeletePlease send bsc computer science detail