Tuesday 1 March 2016

அசத்தும் 5G தொழில்நுட்பம்


நம் நாட்டில் இப்போ தான் 4ஜி அதிக அளவில் கொண்டாடப்பட்டு வரும் நேரத்தில் நாம் உணர முடியாத அளவிற்கு சிறப்பு அம்சங்களுடன் வந்துள்ளது 5ஜி. இன்னும் புழக்கத்திற்கு வரவில்லை என்றாலும் வருவதற்கு முன்னரே அதிக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏர்டெல், வோடாபோன் போன்ற நிறுவனங்கள் 4ஜியை சேவையை அதி வேகமாக பயன்பாட்டிற்கு வழங்க துவங்கியுள்ளன. 4ஜி சேவை வளர்ந்து வரும் இந்நேரத்தில் வெகு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படும் 5ஜி பற்றிய முக்கியமான சில தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

அதிகவேக நெட் சேவை

5ஜி சேவையில் மிக முக்கிய சிறப்பு இதன் வேகம்தான். சூப்பர்ஃபாஸ்ட் நெட் என்றே அழக்க வேண்டும். இது எவ்வளவு தரவுகள் கொள்ளும் என்பதை காட்டிலும் அதன் வேகமே அனைவரையும் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.


புதுமை

5ஜி முழுக்க முழுக்க புதிய கண்டுபிடிப்பு என்றே கூற வேண்டும். இது 5ஜிக்கு பொருந்தக்கூடிய கேட்ஜெட்களும் மற்ற கேட்ஜெட்ஸ்களுக்கும் பொருந்தக் கூடியது. இது IoTஐ பற்றியது என்பதால் மற்ற கேட்ஜெட்களுடன் சேர்ந்து செயல்படும் தன்மை கொண்டது.


விலை

அதிக வேகம் என்பதால் விலையும் அதிகம் தான். இது மற்ற 4ஜி அல்லது 3ஜியை போன்று அனைவராலும் வாங்க முடியாமல் தான் இருக்கும். பணம் இருந்தால் இதை அனுபவித்து மகிழ முடியும்.


செயல்படுத்துவது கடினம்

விலை அதிகம் உள்ள தொழிநுட்பம் என்பதால் இதை செயல்படுத்த கொஞ்சம் நாட்கள் எடுத்து கொள்ளும். இதற்கு முதலீடு அதிக அளவிற்கு தேவைப்படும் மற்றும் அரசாங்க காப்பீட்டுக்கள் தேவைப்படும்.


டெலிகாம் நிறுவனங்கள்

வளர்ந்து வரும் டெலிகாம் நிறுவனங்களான China Mobile, Vodafone, Bharti Airtel மற்றும் SoftBank போன்றவைகள் இதை அதிகம் எதிர்பார்க்கின்றன. இவை தற்பொழுது உள்ள 4ஜியை மேலும் முதன்மைப்படுத்தவும் 5ஜியை அமலுக்கு கொண்டுவரவும் எதிர் நோக்கி உள்ளன.

No comments:

Post a Comment