Tuesday 1 March 2016

ரிலையன்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன்

இந்தியாவில் குறைந்த விலையில் மொபைல் போன்களை வழங்குவதில் பெயர்போன ரிலையன்ஸ் நிறுவனம் 4ஜி அம்சம் கொண்ட புதிய கருவிகளை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் LYF பிரான்டை சேர்ந்த ஃபிளேம் 1 மற்றும் விண்ட் 6 4ஜி கருவிகளின் விலை மற்றும் விற்பனை குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன் படி ஃபிளேம் 1 ரூ.6,490, LYF விண்ட் 6 ரூ.7,090 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரு கருவிகளும் இந்தியா முழுக்க சுமார் 1,20,000 சில்லறை வணிகர்களிடம் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவைகளில் வழங்கப்பட்டிருக்கும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு..
ஃபிளேம் 1 கருவியில் 4..5 இன்ச் திரை 5 எம்பி ப்ரைமரி கேமரா, ப்ளாஷ், மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதோடு 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர், 1 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்குதளம் கொண்டிருக்கின்றது.
மெமரியை பொருத்த வரை 8 ஜிபி இன்டர்னல், கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் கொண்டிருக்கின்றது. 4ஜி எல்டிஇ, டூயல் சிம் செட்அப், வோல்டிஇ, வோ வை-பை, ஜிபிஎஸ் மற்றும் ப்ளூடூத் வி4.0 போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களோடு 2000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.
ஃபிளேம் 1 கருவியை விட விண்ட் 6 சற்றே பெரிய கருவியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 5 இந்ச் திரை, 5 எம்பி ப்ரைமரி கேமரா, மற்றும் 5 எம்பி செல்பீ கேமரா, 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் குவாட்கோர் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் டூயல் சிம் வசதி, ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1, வோல்டிஇ, வோ வை-பை, ஜிபிஎஸ் மற்றும் ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களோடு 2250 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

No comments:

Post a Comment