Friday 28 November 2014

ரூ.80 கோடிக்கு லிங்கா உரிமத்தை வேந்தர் மூவிஸ் கைப்பற்றியது


சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் உருவாகி வரும் லிங்கா படத்தை தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் வெளியிடும் உரிமத்தை வேந்தர் மூவிஸ் கைப்பற்றியது.

கோவை தவிர்த்த தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் இப்படத்தை வெளியிடுவதற்கான உரிமத்தை ஈராஸ் நிறுவனத்திடமிருந்து வேந்தர் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ரூ.80 கோடி கொடுத்து இந்த உரிமத்தை வேந்தர் மூவிஸ் 
கைப்பற்றியது.

கோவையில் உள்ள பிரபல நகைக்கடை நிறுவனம், கோவை பகுதி தியேட்டர் உரிமத்தை மட்டும் கேட்டுவருகிறது. இதற்காக பெருந்தொகையை தரவும் அந்நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது. இது தவிர கேரளாவில் உள்ள தியேட்டர்களில் வெளியிடுவது தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கேரள உரிமத்திற்காக ரூ.10 கோடி வரை தருவதற்கு விநியோகஸ்தர்கள் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. 

திரைப்படம் ஒன்றை ஒரு மாநிலத்தில் வெளியிடுவதற்காக இவ்வளவு பெரிய தொகை தருவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment