Friday, 28 November 2014

பெட்ரோல் டீசல் விலைக் குறைப்பு அறிவிப்பு விரைவில் வெளியாகும்

(Source Siliconindia)
சர்வதேச சநதையில் கச்சா எண்ணெய் டீப்பாய் ஒன்றின் விலை 30 சதவிகிதம் சரிந்துள்ளது என்றும், அதன்படி டீப்பாய் ஒன்றின் விலை தற்போது 75 டாலராக உள்ளது என்றும் தெரிய வருகிறது. இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தே ஆகவேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளன.கடந்த வாரமே பெட்ரோல் டீசல் விலைக் குறைப்பு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், மத்திய அரசு இவைகளுக்கான கலால் வரியை உயர்த்தியதால், அப்போது விலைக் குறைப்புக் குறித்த அறிவிப்பை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்கவில்லை.
காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் இப்போது நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், இந்த விலைக் குறைப்பு அறிவிப்பு வெளியாகும் என்றும், அந்த அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளைக்குள் வெளியாகும் என்றும் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment