Friday 14 November 2014

அப்புச்சி கிராமம் திரைவிமர்சனம்


அப்புச்சி கிராமம் என்ற அறிவியல் சார்ந்த திரைப்படம் பூமியில் எறி கற்கள் விழுவதைப் பேசுகிறது. இது போன்ற திரைப்படம் தமிழில் அரிதுதான். இந்த எறி கல்லானது ஒரு மிகவும் பின்தங்கியுள்ள ஒரு கிராமத்தில் விழுகிறது அதன்பின் அங்கே என்ன நடக்கிறது என்பதுதான் மொத்த கதை. 
இது அறிவியல் சார்ந்த படமாக இருந்தாலும் கொஞ்சம் காதல் கொஞ்சம் பாசம் என்று கலந்து பார்பவர்களுக்கு சோர்வைத் தராமல் கொஞ்சம் விழிப்புணர்வு தந்திருக்கிறார் இயக்குனர். 
தெரிந்த முகங்கள் என்று பார்த்தால் நாசர், கிட்டி, ஜோய் மல்லுரி, ஜி எம் குமார், கஞ்சா கருப்பு மற்றும் புதுமுகங்கள் பிரவீன்குமார், சுஜா வருணீ, ஸ்வசிகா, அனுஷா நாயக் நடித்திருக்கிறார்கள். 
அப்புச்சி கிராமத்தில் குடும்பத் தகறாருகள், ஜாதி பிரச்சினையுடன் காதலும் ஜோரகவே நடக்கிறது. ஒரு கட்டத்தில் இந்த கிராமத்தில் ஒரு எறிகல் விழுகிறது, முன்டாசுபட்டி படத்தில் வருவதுபோல் இந்தப்படத்திலும் அந்த கல்லை சாமியாக நினைத்து வழிபாடு நடக்கிறது. 
ஆனால் முதலமைச்சர் விண்வெளி கற்கள் அப்புச்சி கிராமத்தை தாக்கப்போகிறது என்று அறிவிக்க அனைவரும் அதிர்ச்சி அடையகிறார்கள். இந்த பிரச்சினையை சமாளிக்க இஸ்ரோவின் உதவியை நாடுகிறது. எறி கல் விழும் நாள் அறிவித்து அந்த நாளும் வருகிறது, இதற்கு இந்த கிராமும் தயாராக இருக்கிறது. 
பிறகு எப்படி இதை சமாளித்தார்கள் என்பதை காதலுடன், குடும்பச் சண்டை, பணத்திற்காக சண்டை, விழிப்புணர்வு என்று எல்லா மசாலாக்களையும் கலந்து நன்றாகவேத் தந்துள்ளார் இயக்குனர். இந்த படம் நிச்சியமாக ஏமாற்றது தைரியமாக பார்க்கலாம்.

திருடன் போலீஸ் திரைவிமர்சனம் படிக்க கிழே க்ளிக் செய்யவும்

http://onlinearasan.blogspot.in/2014/11/thirudan-police-movie-review.html

No comments:

Post a Comment