Friday 14 November 2014

திருடன் போலீஸ் திரைவிமர்சனம்


இது ஒரு தந்தை மகன் நடுவில் உள்ள பாசத்தை பேசும் படம். படத்தில் “ அட்டக்கத்தி “ தினேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆடுகளம் நரேன், ராஜேஷ், முத்துராமன், நிதின் சத்யா மற்றும் எஸ் பி பாலசுப்பிரமணியம் முக்கிய இடத்தில் வருகிறார். 
தினேஷ் தலைமை கான்ஸ்டபிளின் மகன், வாழ்கை ஏதோ போகிறது ஒரு சமயத்தில் திடிரென்று இறந்துபோக தினேஷ் இடிந்துபோகிறார் புதுமுக இயக்குனர் கார்த்திக் ராஜு செண்டிமெண்ட் கலந்த அதிரடி படத்தை எல்லரும்ரசிக்கும் வண்ணம் தந்துள்ளார். 
பிறகு தந்தையின் வேலை தினேஷ்க்கு கிடைக்க தன் வேலையை தொடர்கிறார் ஆனால் தன் தந்தை இறந்த காரணம் அறியமுடியாமல் திணறுகிறார். பிறகு கண்டுபிடித்து எதிரிகளை பழிவாங்கும் கதாபாத்திரத்தில் நன்றாக தினேஷ் பொருந்தி உள்ளார். 
இதற்கு நடுவே ஐஸ்வர்யாவுடன் காதலும் இருக்கிறது. படம் சோர்வைத் தராமல் நன்றாக நகைச்சுவையாக போகிறது ஆனால் படத்தில் இறுதியில் இயக்குனர் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். 
தினேஷ் வழக்கம்போல் பாராட்டைப் பெற்றுவிடுகிறார், இவரை சுற்றித்தான் படமும் பயணம் செய்கிறது. ஐஸ்வர்யாவும் தினேஷ் காதலியாக அழகாகவும் நடித்துள்ளார், ஜோடி பொருத்தம் நன்றவே இருக்கிறது. 
வழக்கமாக ஆடுகளம் நரேன் மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன் பட்டையை கிளப்புகிறார்கள். நல்ல பொழுதுபோக்கு திரைப்படம்.

அப்புச்சி கிராமம் திரைவிமர்சனம் படிக்க கிழே கிளிக் செய்யவும்

http://onlinearasan.blogspot.in/2014/11/appuchi-kiramam-movie-review.html


No comments:

Post a Comment