Sunday, 23 November 2014

என்னை அறிந்தால் பொங்கல் வெளியீடு


கவுதம் மேனன் இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிக்கும் ‘என்னை அறிந்தால்’என்ற திரைப்படம் பொங்கல் அன்று வெள்ளித்திரை காண்கிறது. இதனை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

என்னை அறிந்தால் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படத்திற்கான விளம்பரங்கள் மற்றும் பிற தகவல்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அஜித், அனுஷ்கா, த்ரிஷா, விவேக், அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படத்தை கெளதம் மேனன் இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம். தயாரித்துள்ளார். 

நகைச்சுவை நடிகர் விவேக்கும் அஜித் போலவே சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தோன்றவுள்ளார். இந்த செய்தியை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விவேக் ஏற்கெனவே பகிர்ந்துள்ளார். 

பொங்கல் 2014 அன்று 'வீரம்' வெளிவந்து ரசிகர்களை மகிழ்வித்தது போலவே, இந்தப் பொங்கலுக்கு 'என்னை அறிந்தால்' அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

No comments:

Post a Comment