Monday, 24 November 2014

தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர்ஸ்டார் என்று நிருபித்த ரஜினி


மெகா ஹிட் படையப்பா

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் மின்சார இசையில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய படம்தான் “ படையப்பா “ முதலில் இதற்கு “ படையம்மா “ என்றுதான் பெயர் வைக்கப்பட்டது இதுமட்டும் இல்லை முதலில் இரண்டு இடைவேளைகள் வரும் அளவிற்கு நீளமான படமாக இருந்தது. இதைப்பற்றி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது நண்பர் உலகநாயகன் கமல்ஹாசனின் கருத்தை கேட்டார். அவர் இந்த படத்திற்கு “ படையம்மா “ என்கிற பெயர் வேண்டாம் “ படையப்பா “ என்று வைக்கலாம் என்றும் இரண்டு இடைவேளைகள் கண்டிப்பாக வேண்டாம் முடிந்தவரை படத்தின் நீளத்தைக் குறைத்து வெளியிட முக்கிய ஆலோசனைகள் கூறினார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு தீர்கத்தரிசி என்றே கூறவேண்டும் காரணம் கே.எஸ்.ரவிக்குமார் இந்த படத்தின் கதையை கூறிய உடனே, இந்த கதை நன்றாக போகும் இந்த படத்தை தொடங்கலாம் என்று தொடங்கி நடித்த படம்தான் மெகா ஹிட் ஆன “ படையப்பா “. அன்றைய நாளில் வசூல் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது, தமிழ் திரை உலகின் புதிய உச்சத்தை தொட்டது. ரசிகர்களுக்கு “ பாட்ஷா “ படத்திற்கு பிறகு மிகவும் புடித்த படம் எது கேட்டால் கன்டிப்பாக “ படையப்பா “ என்றுதான் இன்றளவும் பதில்வரும் ஆனால் இதுதான் என் கடைசி படம் என்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நிறுத்திக்கொண்டார்.

சோதனைகளை சந்தித்த “ பாபா “

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்திடமிருந்து எந்த பட அறிவிப்புகள் வருவதாக தெரியவில்லை. அவர் ஆன்மிகம், இமையமலை, மகா அவதார் பாபாஜி என்று தன் கவனத்தை திருப்பிவிட்டார். பிறகு வெகுநாள் கழித்து தன் திருப்த்திக்காக “ பாபா “ என்ற படத்தை அறிவித்தார் இதில் முக்கியமான விஷயம் இந்த படம் லாபம் சம்பாரிக்க வேண்டும் என்று இந்த படத்தை அறிவிக்கவில்லை. ஆனால் ஏற்கனவே “ ஸ்ரீ ராகவேந்தர் “ திரைப்படம் முழுக்க முழுக்க பக்திப் படமாக வந்து ரசிகர்களை திருப்பதிபட வைக்கமுடியவில்லை, அதனை கருத்தில்கொண்டு “ பாபா “ படம் சற்று ஜனரஞ்சகப் படமாக வெளிவரும் வேளையில் தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட கட்சி பிரச்சினை செய்து கசப்பான அனுபவமாக மாறியது உங்களுக்கே தெரியும். தீர்க்கதரிசியான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்று நினைக்கவில்லை, உண்மையில் அப்படித்தான் நடந்ததும். ஆனாலும் படத்தின் தயாரிப்பு செலவைவிட இருமடங்கு சம்பாரித்து தந்தது இருந்தும் சில இடங்களில் விநியோகஸ்தர்கள் நஷ்டம் அடைந்ததால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நஷ்டத்தை தானே ஏற்றுக்கொண்டு பணத்தை திருப்பி தந்துவிட்டார்.

இமாலைய சாதனைப் படைத்த “ சந்திரமுகி “

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஆதிக்கம் முடிந்தது என்று நினைத்தார்கள். திடிரென்று வந்தது சந்திரமுகி பட அறிவிப்பு ஆனாலும் அந்த அளவிற்கு மக்களின் எதிர்ப்பார்ப்பு படம் வெளியாகும் வரை இல்லை என்றே சொல்லவேண்டும். ஆனால் படம் வெளியாகி தமிழ் திரைவுலகின் அனைத்து சாதனைகளையும் உடைத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே வாயை பிளந்துகொண்டு பார்த்தது. தமிழ் என்ற மொழி இருக்கிறதா என்று அறியாத நாடுகளில்கூட “ சந்திரமுகி “ மொழிமாற்றம் செய்து வெளியாகி வெற்றிபெற்றது என்றால் பார்த்துகொள்ளுங்கள். ஆனால் இது முழுக்க முழுக்க ரஜினி படமா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை. இந்த படத்தில் கதாநாயகன் என்று யாரும் இல்லை கதாநாயகியாக நடித்த ஜோதிகாவை சுற்றித்தான் மொத்த கதையும் இருந்தது. முதலில் ஜோதிகாவிற்கு பதில் நடிகை சிம்ரன்தான் நடிப்பதாக இருந்தது.

120 கோடிக்கு மேல் வசூலித்த “ சிவாஜி “

முதன் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இணைந்த படம் சிவாஜி. தென்னிந்திய மொழிகளில் முதன் முதலில் 120 கோடிகளுக்கு மேல் வசூலித்த படம் “ சிவாஜி “. பாலிவுட்காரர்களுக்கு மரண பயம் இந்த படம் கொடுத்தது என்றால் அது மிகையாகது. “ படையப்பா  “ படத்திற்கு பிறகு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படம் ஆனால் இந்த படமும் முழுக்க முழுக்க ரஜினி படமா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை, 60 சதவீதம் என்று சொல்லலாம்.  

குசேலன்

இந்த படம் பூஜை போடும் போதே முரண்பாடுகள், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் “ இந்த படத்தில் நடிகர் பசுபதி தான் கதாநாயகன் “ என்று கூற கவித்தாலையா மற்றும் பிரமிட் சாய்மிரா நிறுவனர்கள் “ ரஜினிதான் கதாநாயகன் “ என்று கூற ஏகப்பொருத்தமாக இருந்தது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் கௌரவத்தோற்றம்தான் செய்தார். தலைவர் படம் என்று சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிச்சம். தயாரிப்பாளர்கள், இயக்குனர் வற்புறுத்தி ரஜினியை நடிக்க வைத்த படம்தான் “ குசேலன் “. படத்தில் ரஜினிகாந்தின் காட்சிகளை அதிகப்படியானதாக மாற்றியது ரஜினிக்கே பிடிக்கவில்லை. படமும் ஓடவில்லை.

அறிவியல் சார்ந்த “ எந்திரன் “

இயக்குனர் ஷங்கர், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்த இரண்டாவது படம். 2010 ல் வெளியாகிய இந்தப்படம் அன்றைய தேதியில் ஒட்டுமொத்த இந்திய படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் அதாவது உலகம் முழுக்க 340 கோடிகள் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. ஆனால் இந்தப்படம் முழுக்க அறிவியல் சார்ந்த படம், ரஜினியின் மேனரிசம் கொஞ்சம்கூட இல்லாத படம்.

கோச்சடையான்

ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்து காத்திருந்த படம். ஆனால் இது நேரடியாக நடிகர்கள் திரையில் தோன்றாத படம் அதாவது “ மோஷன் கேப்சரிங் “ அதாவது தமிழில் “ சலன பதிவாக்கம் “ முறையில் உருவான படம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ரஜினியை பிடிக்காதவர்கள் “ பொம்மைபடம் “ என்று கிண்டல் செய்யும் அளவிற்கு அமைந்துவிட்டது. இந்த தொழில்நுட்பத்தை பற்றி தெரிந்தவர்கள் தலையில் தூக்கிவைத்து கொண்டாடினார்கள். என்ன செய்வது தொழில்நுட்பத்தின் அருமை தெரிந்தவர்கள் கொஞ்சமாத்தான் இருந்தார்கள் ஆனால் வெளிநாடுகளில் நல்ல வரவேற்ப்பு இருந்தது.

ரசிகர்கள் எதிர்நோக்கும் “ லிங்கா ”


படத்தின் டிசேர், டிரேய்லர் மற்றும் பாடல்கள் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது. படத்தின் டிசேர் மற்றும் டிரேய்லர் பார்க்கும்போது இந்த முறை கண்டிப்பாக ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. லிங்கா படத்தை 165 கோடிக்கு தயாரிப்பாளர் ஈரோஸ் நிறுவனத்திற்கு விற்றுவிட்டார். ஈரோஸ் நிறுவனமோ படம் வெளியாகாத முன்பே 200 கோடிகளுக்கும் மேல் விற்று லாபம் பார்த்துவிட்டது. இந்தியப்படம் இந்த தொகைக்கு விற்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். இந்த முறையும் சூப்பர்ஸ்டார், படம் வெளியாகாத முன்பே புதிய சாதனை படைத்து தாண் தான் தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர்ஸ்டார் என்று நிருபித்துவிட்டார் ரஜினிகாந்த். “ லிங்கா “ திரைப்படம் மாபெரும் வெற்றி படைத்து சாதனை படமாக வரும் என்று OnlineArasan குழு வாழ்த்துகிறது.

No comments:

Post a Comment