Sunday 16 November 2014

மடிகணினி (Laptop) பயன்படுத்துகின்றீர்களா


கணினி வகைகளில் சந்தையில் கிடைக்கும் எல்லா வகை பொருட்களையும் வாங்கவில்லை என்றால் நமக்கு தான் தூக்கமே வராதே, சந்தையில் புதுசா எந்த பொருள் வெளியானாலும் அதை வாங்கி பயன்படுத்துவோம். சிலர் வீம்புக்கென்றே அதை வாங்கி பயன்படுத்தாமல் இருப்பர்.

தூசு

உங்க மடிகணினியை எந்த சூழலிலும் தூசு படியாமல் பார்த்து கொள்ளுங்கள். இதற்கு மடிகணினி பயன்படுத்தாத சமயத்தில் பாதுகாப்பாக எடுத்து வைக்க வேண்டும்.

சுத்தம் செய்யும் முறைகள்

சிலர் வீட்டை சுத்தம் செய்யும் பொருட்களை கொண்டு மடிகணினியையும் சுத்தம் செய்வர், இது தவறு எப்போதும் கணினி சுத்தம் செய்யும் பொருட்களை கொண்டே சுத்தம் தெய்ய வேண்டும்.

சூடு

உங்க மடிகணினிபை சூடாகாமல் பார்த்து கொள்ளுங்கள், மடிகணினியை எப்போதும் நேரடி சூரிய வெப்பத்தில் பயன்படுத்தாதீர்கள்.

சாக்கெட்

மடிகணினியின் யுஎஸ்பி, ஆடியோ மற்றும் நெட்வர்க் கனெக்டர்களை சேதமாகாமல் பயன்படுத்த வேண்டும்.

புகை

மடிகணினி அருகில் புகை பிடித்தால் உங்க உடலை போலவே மடிகணினியையும் அது பாதிக்கும்.

தீ

எப்போதும் மடிகணினியை சமயலைறையில் பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள்.

பவர் சாக்கெட்

மடிகணினி பவர் சாக்கெட் பாதுகாப்பாக பயன்படுத்துங்கள்.

ஷாக்

எல்லா மடிகணினிகளிலும் ஷாக் ப்ரூப் இருக்கும் இருந்தும் ஹார்டு டிரைவ் ப்ரொடெக்ஷன் உள்ளதா என்பதை சரி பார்த்து கொள்ளுங்கள்.

வைரஸ்

அனைத்து கணினிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பது இந்த வைரஸ்கள் தான் இதனால் மடிகணினிபயில் ஆன்டிவைரஸ் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

பேக்கப்(backup)

அப்படி ஒரு வேளை இந்த முயற்சிகளையும் தாண்டி உங்க மடிகணினி பழுது ஆகலாம் முன்னெச்சரிக்கையாக உங்களுக்கு தேவையான பைல்களை பேக்கப் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment