Saturday 29 November 2014

சென்னை நோக்கியா ஆலையை லாவா மொபைல் வாங்க விருப்பம்


பின்லாந்தை சேர்ந்த நோக்கியா நிறுவனம், சென்னை ஸ்ரீபெரும்புதூரில் மொபைல் தயாரிப்பு தொழிற்சாலையை தொடங்கியது. 
இதன்மூலம் 8,000க்கு மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெற்றனர். இந்நிலையில், வரி ஏய்ப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்நிறுவனம் தொடர்ந்து செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. நோக்கியா சென்னை ஆலையை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்க முன்வந்தது. ஆனால், உத்தரவாத தொகை செலுத்த முடியாததால், நவம்பர் 1ம் தேதிக்கு பிறகு மைக்ரோசாப்டுடனான ஒப்பந்தம் நீடிக்கவில்லை.

இதனால் ஆலை மூடப்பட்டது.  தற்போது, இந்த ஆலையை லாவா மொபைல் தயாரிப்பு நிறுவனம் வாங்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லாவா நிறுவன குழு தொழிற்சாலையை பார்வையிட்டு சென்றுள்ளதாகவும், இதுதொடர்பாக அடுத்த மாத மத்தியில் முடிவு செய்யப்படும். வரி தொடர்பான சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்பே இது சாத்தியமாகும் என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால், நோக்கியாவில் வேலையிழந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. நல்லது நடந்தால் சரிதான்.

No comments:

Post a Comment