மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
வாக்கு சாதுர்யமும், வசீகர பேச்சுத்திறனும் கொண்ட மேஷ ராசிக்காரர்களே! உங்களுக்கு இந்த 2015-ஆம் ஆண்டில் அஷ்டமச் சனி நடைபெறுகிறது. எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவினை உண்டாக்கும். நெருங்கியவர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். வாழ்க்கையில் எவ்வளவோ சாதனைகளைச் செய்துவிட்ட உங்களுக்கு அஷ்டமச் சனிக் காலம் என்பது ஒரு பெரிய பொருட்டேயில்லை. தேவைக்கேற்றபடி பணவரவுகளை ஏற்படுத்திக்கொள்ளும் அளவிற்கு உங்களுக்குத் திறமையுண்டு. குடும்பத் தேவைகளையும் பூர்த்தி செய்துவிடுவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றமுடியும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவதால் கூட்டுத் தொழிலும் மேன்மையடையும். கடன்களையும் படிப்படியாகக் குறைப்பீர்கள். எதிலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடையலாம்.
ஆரோக்கியம்
உங்களுக்கு அஷ்டமச் சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கிய ரீதியாக அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் ஏற்பட்டு உடல் நிலை சோர்வடையும். நெருங்கியவர்கள் ஏற்படுத்தக்கூடிய பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும். மற்றவருக்கு நல்லது செய்ய நினைத்தாலும் அது உங்களுக்கே வீண் பிரச்சசினைகளை ஏற்படுத்தி விடும். முன்கோபத்தைக் குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது போன்ற யாவும் மன நிம்மதியை உண்டாக்கும். ஆண்டின் பிற்பாதியில் குரு 5-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிப்பீர்கள்.
குடும்பம், பொருளாதார நிலை
ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவும் தேவையற்ற கருத்து வேறுபாடுகளும் பொருளாதார நெருக்கடிகளும் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளிலும் தடைகள் ஏற்படக்கூடும். உறவினர்களும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்றாலும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் யாவும் இனிதே நடைபெறும். பணவரவுகள் சரளமான நிலையில் இருக்கும் புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கடன்களும் குறையும்.
வேலைஉங்களுக்கு அஷ்டமச் சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கிய ரீதியாக அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் ஏற்பட்டு உடல் நிலை சோர்வடையும். நெருங்கியவர்கள் ஏற்படுத்தக்கூடிய பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும். மற்றவருக்கு நல்லது செய்ய நினைத்தாலும் அது உங்களுக்கே வீண் பிரச்சசினைகளை ஏற்படுத்தி விடும். முன்கோபத்தைக் குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது போன்ற யாவும் மன நிம்மதியை உண்டாக்கும். ஆண்டின் பிற்பாதியில் குரு 5-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிப்பீர்கள்.
குடும்பம், பொருளாதார நிலை
ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவும் தேவையற்ற கருத்து வேறுபாடுகளும் பொருளாதார நெருக்கடிகளும் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளிலும் தடைகள் ஏற்படக்கூடும். உறவினர்களும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்றாலும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் யாவும் இனிதே நடைபெறும். பணவரவுகள் சரளமான நிலையில் இருக்கும் புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கடன்களும் குறையும்.
உத்தியோகத்திலிருப்பவர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எடுக்கும் பணிகளை முழுமையாக முடிக்க முடியாத சூழ்நிலை, பிறர் செய்யும் தவறுகளுக்கும் வீண் பழிகளைச் சுமக்கக்கூடிய நிலை போன்றவை ஏற்படும். ஆண்டின் தொடக்கத்தில் அலைச்சல்களும் பணியில் நிம்மதிக் குறைவும் ஏற்பட்டாலும், வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் ஓரளவுக்கு கௌரவ மான நிலையினை அடைவீர்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வும் கிட்டும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை அமைய சற்று தாமதமாகும்.
தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் நிறைய போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள், வம்பு வழக்குகள் போன்ற யாவும் உண்டாகும். கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடும், தொழிலாளர்களால் வீண் பிரச்சினைகளும் ஏற்படும். என்றாலும் 05-07-2015 ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் மறையும். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களை சற்று சிந்தித்துச் செயலாக்குவது நல்லது. பயணங்களால் சற்று அலைச்சல் ஏற்படும்.
பெண்கள்
அஷ்டமச் சனி நடைபெறுவது சாதகமற்ற அமைப்பாகும். இதனால் குடும்பத்தில் பிரச்சினை, நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடு, பணவரவில் நெருக்கடி போன்றவை ஏற்படும். உடல் ஆரோக்கியத்திலும் வாயுத் தொல்லை, அஜீரணக் கோளாறு போன்றவை உண்டாகும். வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு 5-ஆம் வீட்டில் பலமாக சஞ்சரிப்பதால் பணவரவுகள் சரளமாக இருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடையின்றிக் கைகூடும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும்.
பணம்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதிலேயே வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்திற்குப் பின்பு எதிலும் லாபமான நிலை உண்டாகும். கமிஷன் ஏஜென்ஸி, கான்டிராக்ட் போன்ற துறைகளிலும் நல்ல லாபம் கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றிவிடுவீர்கள்.
அரசியல்வாதிகள்
அரசியலில் உடனிருப்பவர்களிடம் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. பேச்சிலும், செயலிலும் நிதானம் தேவை. பத்திரிகை நண்பர் களை அனுசரித்து நடந்துகொண்டால் வீண் வதந்திகளிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும். ஆண்டின் பிற்பாதி ஒரளவுக்கு சாதகமளிப்பதாக அமையும். மக்களின் ஆதரவும் உங்களுக்கு சிறப்பாகக் கிட்டும்.
விவசாயிகள்
விவசாயிகளுக்கு வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகளும் அதிகரிக்கும். முடிந்த வரை முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்திற்குப் பின்பு வாழ்வில் ஓரளவுக்கு முன்னேற்றமும் நல்ல விளைச்சலும் உண்டாகும். சந்தையிலும் விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்க முடியும். பூமி, மனை போன்றவற்றையும் வாங்குவீர்கள். கால்நடைகளாலும் நல்ல லாபம் உண்டு.
கலைஞர்கள்
கலைஞர்கள் ஆண்டின் தொடக்கத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. நிறைய மறைமுக எதிர்ப்புகள், கிசுகிசுக்கள் போன்றவற்றால் மனநிம்மதி குறையும். பணவரவுகளிலும் தேக்க நிலை ஏற்படும் என்றாலும் வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குருப்பெயர்ச்சிக்குப்பின் நினைத்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு வந்து சேரும். சுக வாழ்க்கைக்கு பஞ்சம் இருக்காது.
மாணவர்கள்
மாணவ- மாணவியருக்கு இந்த ஆண்டின் தொடக்கமானது சற்று சோதனை நிறைந்தாகவே இருக்கும். கல்வியில் ஈடுபாடு குறையும் என்றாலும் வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குருப்பெயர்ச்சிக்குப் பின் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு உங்களுக்கு மேலும் உற்சாகத்தினை உண்டாக்கும் மதிப்பெண்கள் அதிகரிக்கும்.
பரிகாரம்
மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு அஷ்டமச் சனி நடைபெறுவதால் சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது, சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெயில் தீபமேற்றுவது நல்லது. ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது உத்தமம். சுக ஸ்தானமான 4-ல் குரு பகவான் 05-7-2015 வரை சஞ்சரிக்கவிருப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வதும், தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைதோறும் கொண்டைக் கடலை மாலை சாற்றுவதும் நல்லது. வாழ்த்துக்கள்.
மிதுனம் ராசிக்கான 2015 ஆண்டு பலன்கள்
கடகம் ராசிக்கான 2015 ஆண்டு பலன்கள்
சிம்மம் ராசிக்கான 2015 ஆண்டு பலன்கள்
கன்னி ராசிக்கான 2015 ஆண்டு பலன்கள்
துலாம் ராசிக்கான 2015 ஆண்டு பலன்கள்
தனுசு ராசிக்கான 2015 ஆண்டு பலன்கள்
மகரம் ராசிக்கான 2015 ஆண்டு பலன்கள்
கும்பம் ராசிக்கான 2015 ஆண்டு பலன்கள்
மீனம் ராசிக்கான 2015 ஆண்டு பலன்கள்
மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு அஷ்டமச் சனி நடைபெறுவதால் சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது, சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெயில் தீபமேற்றுவது நல்லது. ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது உத்தமம். சுக ஸ்தானமான 4-ல் குரு பகவான் 05-7-2015 வரை சஞ்சரிக்கவிருப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வதும், தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைதோறும் கொண்டைக் கடலை மாலை சாற்றுவதும் நல்லது. வாழ்த்துக்கள்.
2015 ஆண்டு ராசி பலன்கள்
ரிஷபம் ராசிக்கான 2015 ஆண்டு
பலன்கள்
மிதுனம் ராசிக்கான 2015 ஆண்டு பலன்கள்
கடகம் ராசிக்கான 2015 ஆண்டு பலன்கள்
சிம்மம் ராசிக்கான 2015 ஆண்டு பலன்கள்
கன்னி ராசிக்கான 2015 ஆண்டு பலன்கள்
துலாம் ராசிக்கான 2015 ஆண்டு பலன்கள்
விருச்சகம்
ராசிக்கான 2015 ஆண்டு
பலன்கள்
தனுசு ராசிக்கான 2015 ஆண்டு பலன்கள்
மகரம் ராசிக்கான 2015 ஆண்டு பலன்கள்
கும்பம் ராசிக்கான 2015 ஆண்டு பலன்கள்
மீனம் ராசிக்கான 2015 ஆண்டு பலன்கள்
No comments:
Post a Comment