Saturday 15 November 2014

திருப்பதி செல்பவர்கள் கவனத்திற்கு




திருப்பதி சென்று அங்கிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்கள் கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் செல்லவேண்டும். அதிலும் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என்று சென்றால் நமது பாடு திண்டாட்டம்தான். மேலும் நோயாளிகள் படும் வேதனையை சொல்லவே வேண்டாம். நடந்து செல்லவேண்டும் சிரமும் கூடாது என்று நினைப்பது எங்களுக்கு புரிகிறது.

சரி விசயத்திற்கு வருகிறோம், சிலருக்கு தெரிந்துருக்கலாம், ஆனால் நிச்சியமாக நிறைய பேருக்குத் தெரிய வாய்ப்பு இல்லை. திருப்பதி சென்றவுடன், ரயில் நிலையம் சென்று அங்கே இலவசப் பேருந்துகள் வந்து நிற்கும் இடத்திற்குச் செல்லுங்கள். அங்கிருந்து “ ஸ்ரீ வாரி  மேட்லு “ அதாவது தமிழில் “ ஸ்ரீ வாரி மேடு “ என்ற இடத்திற்குச் சென்று இறங்க வேண்டும். 



சுற்றுலா வானங்களிலும் செல்லலாம். Google Map ல் 17 கி.மி காட்டுகிறது, ஆனால் 22 கி.மி தொலைவு செல்லவேண்டும். இங்கிருந்து ஏழுமலையான் கோவிலுக்கு செல்ல குறைந்தது ஒரு மணி நேரம்தான் ஆகும், அதிகபட்சமாக ஒன்றரை மணிநேரம்தான் ஆகும்.

இந்த வழியின் சிறப்புகள்

ஏழுமலையானே முதன் முதலில் திருமலைக்கு இந்த வழியில்தான் சென்றார்.

பத்மாவதி தாயாருடன் ஏழுமலையான் இந்த வழியில்தான் சென்றார்.
திருமலைக்கு இதுதான் புராதன வலியும்கூட.

அதிக கூட்டம் வராது.

குடிநீர் பிரச்சினை இல்லை.

மிகவும் சுத்தமான, சுகாதாரமான வழி.

எச்சரிக்கை குறிப்பு

இந்த வழியாக வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை போன்ற தினங்களில் செல்ல அனுமதி இல்லை மறக்காதிர்கள்.

இது அடர்ந்த வனப்பகுதியில் இருப்பதால் வன விலங்குகளால் ஆபத்து வர வாய்ப்புகள் உண்டு.


இந்த வழியில் அதிகமாக கழிவறை வசதிகள் (நான்கு கழிவறை உள்ளது) இல்லை.

No comments:

Post a Comment