Saturday, 29 November 2014

மார்பக புற்றுநோய் சுயபரிசோதனை

(Source healthxwellness)
மார்பக புற்றுநோயை பொறுத்தவரையில் அது பெருகி, பெண்களை மிரட்டத்தான் செய்கிறது. ஆனாலும் சத்தமில்லாமல் கொல்ல முயற்சிக்கும் இந்த நோயை பெண்களால் எளிதாக தவிர்க்கவும், தடுக்கவும் முடியும்.
சுயபரிசோதனை மூலம் தொடக்கத்திலே ஓரளவு கட்டறிய வாய்ப்பிருக்கிறது. பெண்கள் 20 வயதில் இருந்தே இதை செய்து வர வேண்டும். குளிக்க தயாராகும்போது கண்ணாடி முன்னால் நின்றுகொண்டு நுனி விரல்களால் மார்பகம் முழுவதையும் மென்மையாக வருடிப்பார்த்தால் கட்டி ஏதாவது இருந்தால் கண்டுபிடித்து விடலாம்.
கைகளை மேலே உயர்த்தியபடி நின்றால், கண்ணாடியில் மார்பக அளவுகளில் வித்தியாசங்கள் இருந்தால் தெரிந்து கொள்ள முடியும். காம்புகளில் ஏற்படும் மாற்றங்கள், அந்த பகுதி சருமங்களில் ஏதேனும் மாற்றம் இருந்தாலும் கண்டு பிடித்துவிடலாம். மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சிலருக்கு மார்பகங்களில் நீர்கட்டிகள் தோன்றி மறையும்.
அதை புற்றுநோய் கட்டியாக நினைத்து பயந்து விடக்கூடாது. அதனால் மாதவிலக்கு முடிந்த பத்து நாட்கள் கழித்து சுயமார்பக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மார்பக புற்றுநோய் ஆண்களுக்கும் வரும் அபயம் உள்ளது அதனால் ஆண்களும் முயற்சி செய்வது நல்லது.

No comments:

Post a Comment