Monday 17 November 2014

ரஜினி முதல்வர் ஆகவேண்டும் இயக்குநர் அமீர் பேச்சு


கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'லிங்கா' இசை வெளியீட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இயக்குநர் அமீர் பேசியது:

" 'லிங்கா' என்ற தலைப்பு நானும் தனுஷும் இணைந்து நடிப்பதற்காக பதிவு செய்து வைத்திருந்தோம். கே.எஸ்.ரவிக்குமார் கேட்டவுடன் கொடுத்துவிட்டேன். அதே போல 10 வருடங்களுக்கு முன்பு அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பது குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது. எதுவுமே பேசாமல் தற்போதும் அதே சூப்பர் ஸ்டார் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கிறார்.

இன்று காலை வரும் போது கோர்ட்டை பின்னாடி தள்ளிவிட்டு நடந்து வருவது போல ஒரு ரஜினி படம் பார்த்தேன். யாருமே என் பின்னாடி நிக்காதீங்கடா, தள்ளிப் போங்கடா என்று ரஜினி கூறுவது போலவே இருந்தது.

தற்போது இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருக்கிறீர்கள். இன்னும் 10 வருடங்கள் கழித்து உலகத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருப்பீர்கள். பள்ளிக் காலத்தில் இருந்து சினிமாவிற்கு வந்துவிட்டேன். இப்போது வரை சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் இருக்கிறார். நீங்க சி.எம் ஆகவேண்டும். படத்தில் வரும் வசனங்கள் எல்லாம் நான் பேசவில்லை, இயக்குநர்கள் எழுதுகிறார்கள் நான் பேசுகிறேன் என்று சொல்கிறீர்கள். எங்க உங்க மனசு தொட்டு சொல்லுங்க. உங்க மனதில் இருப்பதை தான் ஒவ்வொரு இயக்குநரும் எழுதுகிறார்கள்.

'லிங்கா' படத்தின் ட்ரைலரில் ஒப்பனிங் காட்சியில் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள். நாங்களும் அதைத்தான் கேட்கிறோம். அதான் இங்க இருக்கிற எல்லாரோட ஆசையும். முப்பது வருஷமா உங்க ஒருத்தர் மீது மட்டும்தான் மாறாத நம்பிக்கை வைத்துள்ளார்கள் இந்த மக்கள். இப்போதுதான் ஒரு தீபாவளி போச்சு. டிசம்பர் 12 அடுத்த தீபாவளி வருகிறது. நான் உங்களிடம் ஒன்று மட்டும் கேட்கிறேன். இந்த டிசம்பர் 12-க்கு 'லிங்கா' அடுத்த டிசம்பர் 12-க்கு என்ன என்பதை நீங்கள் சொல்ல வேண்டும்.

விமர்சனத்தை எல்லாம் தூக்கி ஏறியுங்கள். தமிழக மக்களுக்கு ஏதாவது நல்ல செய்ய வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால், நீங்கள் ஒரு அறிவிப்பு மட்டும் கொடுங்கள்... நாங்கள் எல்லாம் உங்கள் பின்னாடி வந்து விடுகிறோம். உங்களிடம் மட்டும்தான் கேட்க முடியும். வேறு யாரிடம் போய் கேட்க முடியும். எனக்கு தெரிந்து நான் வேறு யாரையும் தலைவர் என்று சொல்லியதில்லை" என்றார் அமீர்.

மேலும் சினிமா செய்திகளுக்கு
http://onlinearasan.blogspot.in/search/label/Cinema

No comments:

Post a Comment