Sunday 30 November 2014

30 வயதிற்குள் சாதித்தவர்கள் என்ன செய்தார்கள்

(Source Linkedin)

நம்முடைய முப்பது வயதுக்குள்ளேயே நமது வாழ்க்கையை நன்றாக நிலைநிறுத்த விடாமுயற்சியுடன் உழைத்து பல பேர் நமது இலக்கை அடைகிறோம். இன்னும் சிலர் தவறிவிடுகிறார்கள் அவர்களுக்கு OnlineArasan தரும் ஒரு பொக்கிஷம்தான் இந்த பதிவு.
1.   நீங்கள் வெற்றி பெறவேண்டும் என்று நினைப்பவர்களிடம் நேரத்தை செலவிடுதல் மிக முக்கியம் அல்லது உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்களிடம் நேரம் ஒதுக்குதல் இதுபோன்ற குணம் உங்களை உங்கள் இலக்கை நோக்கி அழைத்து செல்வதில் பெரும் பங்கு வகிக்கிறது.
2.   உங்கள் கனவுகளை நனவாக்க நேரம் ஒதுக்குதல். எல்லோரும்தான் கனவு காண்கிறார்கள் ஆனால் அதற்கு வடிவம் கொடுக்க தவறும்போதுதான் அவர்களை இந்த உலகம் தோல்வியாளர்களாக பார்க்கிறது.
3.   எதிர்காலத்தில் வாழுங்கள். முன்னால் இந்தியப் ஜனாதிபதி திரு அப்துல் கலாம் அவர்கள் நிகழ்காலத்தில் வாழ்திருந்தால் நிச்சியமாக அவர் அணு விஞ்ஞானம் படித்து இந்த நிலைமையில் இருந்திருக்கமாட்டார். எதிர்காலத்தில் தன் நிலை இப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஒவ்வொரு நாளும் தன்னை செதுக்கியதால்தான் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார்.
4.   குழந்தைகள் பெற்றுகொள்வதில் அக்கறை. இந்திய வாழ்கை முறையில் குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் முக்கியமானது அதனால் இருபத்தி நான்கு மற்றும் இருபத்தி ஆறு வயதிற்குள்ளாகவே குழந்தை பெற்றுக்கொள்வது நல்லது.
5.   தங்களின் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும், உங்கள் லட்சியம் முக்கியம்தான் ஆனால் அதை அடைய உங்கள் உடல் நன்றாக இருந்தால்தானே அதை அடைய முடியும்.
6.   எதிர்காலத்திற்காக பணத்தை சேமித்தல். சம்பாரிக்கும் மொத்த பணத்தையும் பத்தாம் தேதிக்குள் செலவு செய்துவிட்டு கடன் வாங்கினால் உங்களைவிட முட்டாள் இந்த உலகில் யாரும் இல்லை ஆனால் இந்த வகை முட்டாள்களே இந்த உலகில் அதிகம். சரி நீங்கள் இந்த வகை முட்டாளா?, ஆம் என்றால் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.
7.   உங்களையே நீங்கள் விரும்புங்கள். உங்களை நீங்கள் விரும்பினால் இந்த உலகமே உங்களை விரும்பும். நீங்களே உங்களை வெறுத்தால் இந்த உலகமும் வெறுக்கத்தான் செய்யும்.

சிந்தித்து செயல்படுங்கள் வெற்றி நிச்சயம் OnlineArasan-னின் வாழ்த்துக்கள். 

No comments:

Post a Comment