Sunday, 30 November 2014

டிராவல் ஏஜென்சி – சின்ன முதலீடு பெரிய லாபம்

(Image Global traveler)

இப்போதெல்லாம் ஒரு சிறிய நிறுவனம் நிர்மாணிக்க வேண்டும் என்றால்கூட லட்சங்கள், கோடிகள் தேவைப்படும் பின்பு வேலையாட்கள் அவர்களுக்கு பயிற்சி என்று ஆரம்பத்தில் செலவு நீளுமே தவிர சற்றும் குறைய வாய்ப்பே இல்லை.

ஆனால் வெகு சில தொழில்கள் மட்டும்தான் சின்ன முதலிடுகள் செய்தாலே போதும் லாபத்தை வாரி இரைக்கும் தன்மை கொண்டது. படித்த படிப்பிற்கு சரியான வேலை கிடைப்பதில்லை நம் நாட்டில் அதனால்தான் என்னவோ நாம் படித்ததை செய்யும் வேலையில் பயன்படுத்த மறந்துவிடுகிறோம். அப்படி பயன்படுத்தினால் லாபமும், வெற்றியும் நிச்சயம். இதோ உங்களுக்காக OnlineArasan தளத்தின் வாயிலாக சில லாபகரமாக இருக்கும் சிறு தொழில்களைப் பற்றி தெரிவிக்கிறோம். படித்து பயன்பெறுங்கள், மற்றவருக்கும் பகிர்ந்து உதவுங்கள்.

டிராவல் ஏஜென்சி தொழிலைப் பொறுத்தவரையில் பெரிதாக முதலீடுகள் தேவையில்லை. ஆனால் இந்த தொழிலில் இறங்கும்முன் தயவுசெய்து குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் ஏற்க்கனவே டிராவல் ஏஜென்சி நடந்துகொண்டிருக்கும் இடத்தில் பயிற்சி எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.

எப்படி செய்வது
இது மிகவும் சுலபம்தான் வெளியூர் செல்பர்களுக்கு பயணச்சிட்டு பெற்றுதரப் போகிறீர்கள். ஆனால் இதில் ஏகப்பட்ட தொழில் நுணுக்கங்கள் இருக்கிறது அதற்கேற்றவாறு செயல்பட்டால் ஒரே ஒரு வருடம்தான் நீங்கள் லட்சாதிபதி. நம்புங்கள் நிச்சயம் இது சாத்தியம்தான்.

சிறந்த இடம்
தமிழ் நாட்டைப் பொறுத்தவரை சென்னை, திருச்சி, மதுரை, கோவை, ஓசூர், நெல்லை, ஈரோடு, சேலம் மற்றும் சுற்றுலா சார்ந்த இடங்கள் இந்த தொழிலுக்கு மிகவும் சிறந்த இடங்கள், ஆரம்பித்த ஒரு மாதத்திலேயே தொழில் சூடுபிடிக்க ஆரம்பித்துவிடும். மற்றபடிக்கு எல்லா மாவட்ட தலைநகரத்திலும் இந்த தொழிலை தாரளமாக செய்யலாம் ஏனென்றால் ஆரம்பத்தில் லாபம் குறைச்சலாக இருந்தாலும் நஷ்டத்திற்கு வாய்ப்பில்லை.

எப்படி ஆரம்பிப்பது
முதலில் உங்களால் பத்துக்கு பத்து அல்லது ஐந்துக்கு ஐந்து என்ற அளவில் இடம் பிடிக்க முடித்தால் போதுமானது. பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது இன்னும் பெரிய இடம்பார்த்து மாறிவிடுவது நல்லதுதான் ஆனால் ஆரம்பத்தில் வசதிகள் குறைவாகவே இருந்தாலும்கூட அங்கேயே ஆரம்பியுங்கள் தவறில்லை. சிலருக்கு இந்த இடத்தைக்கூட பிடிக்க முடியாமல் போகலாம் அல்லது முன்பணம், வாடகைக்கு பணமில்லை என்று வருத்தமோ கவலையோ வேண்டாம். உங்கள் வீட்டின் முன் அறையில் கூட ஒரு மேசை, இரண்டு நாற்காலி போட்டு நம்பிக்கையுடன் ஆரம்பியுங்கள்.

எப்படி அணுகுவது
பொதுவாகவே நாம் மூன்று வழிகளில் பயணம் செய்கிறோம் அதாவது பேருந்து, இரயில், விமானம் பயணங்கள். இந்த மூன்று விதமான பயணத்திற்குத் தகுந்தற்போல உங்கள் அணுகுமுறை இருக்கவேண்டும். சரி நீங்கள் பேருந்து பயணிகளுக்கு பயணச்சிட்டு பதிவு செய்து தருகிறீர்கள் என்று வைத்துகொள்வோம். பயணிகளுக்கு தெரியும் விதத்தில் ஒரு பேனர் தயார் செய்து சரியான இடத்தில் நிறுவுங்கள் அல்லது தனியார் வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் உங்கள் பேனர் இருக்குமாறு பார்த்துகொள்ளுங்கள். உங்கள் கடையும் இந்த இடத்திலேயே இருக்குமாறு பார்த்துகொள்ளுங்கள் இது நன்றாக பயன்தரும். உள்ளூர் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்யலாம், காலை நாளிதழ்களில் நோட்டீஸ் தயார் செய்து இணைத்து கொடுக்கலாம், உங்கள் ஊர் ஆரம்பம் மற்றும் எல்லையில் விளம்பர பேனர் வைக்கலாம்.

இல்லை இந்த அளவுக்கு என்னால் செலவு செய்து விளம்பரப்படுத்த முடியாது என்றாலும்கூட கவலை வேண்டாம். நீங்கள் செய்ய வேண்டியது அதிகமாக பயணம் செய்பவர்கள் யார் என்று தெரிந்துகொண்டு அவர்களை தொடர்கொண்டு சிறிது சிறிதாகவே ஆரம்பிக்கலாம்.

உங்களின் தரம்
ஒரு நிறுவனத்தின் தரம்தான் மிகவும் முக்கியமானது, தரம் இல்லையேல் அந்த நிறுவனத்தின் பொருள் எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும்கூட அது குப்பைக்கு சமம்தான். எனவே நல்ல நிலையில் இருக்கும் பேருந்தாக பார்த்து பயணச்சிட்டு பதிவு செய்துகொடுங்கள். உங்களிடம் வருபர்களை கண்ணியமாக நடத்துங்கள் மரியாதையாகவும் பேசுங்கள் இல்லையேல் மறுபடி உங்களைத்தேடி வரவே மாட்டார்கள் அவர்களுக்கு தெரிந்தவர்களையும் உங்களிடம் அனுப்பமட்டர்கள்.

பேருந்துகளை சரியாக தேர்ந்தெடுங்கள்

எப்போதும் தரமாக இருக்கும் பேருந்துகளுக்கே முன்னுரிமை கொடுங்கள் தரமில்லாத பேருந்துகளைத் தவிர்த்துவிடுவது மிகவும் நல்லது.  பக்கத்து மாநிலங்களுக்கு செல்லும் பேருந்தாக இருந்தால் நிச்சயம் பெர்மிட் வைத்திருக்கிறார்களா என்று தெரிந்துகொண்டு பயணச்சிட்டு பதிவு செய்து கொடுங்கள். 

No comments:

Post a Comment