Saturday, 22 November 2014

விஜய்58 பற்றியத் தகவல்கள்


விஜய்58’ பேண்டஸி கதையில் விஜய்யுடன் ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மற்றும் வில்லன் கேரக்டரில் ‘நான்ஈ’ சுதீப் நடிக்கிறார்கள். இப்படத்தில் ‘க்ராஃபிக்ஸ்’ நிறைந்த வேலைகள் அதிகம் இருப்பதால் அந்த வேலைகளை மேற்கொள்ள லண்டனை சேர்ந்த ‘VFX ஸ்டுடியோ’ ஒப்பந்தமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதது.
ஹன்சிகா தனது ட்விட்டர் தளத்தில் '' அதிகாலை, இளவரசி கெட்டப், மேக்கப் , ஹேர், க்ளேம் அப், விஜய் 58'' என ட்வீட் செய்துள்ளார். மேலும் படப்பிடிப்பில் மேக்கப் செய்துகொள்ளும் போட்டோ ஒன்றையும் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டுள்ளார்.
விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.இதில் ஒன்று சித்திரக்குள்ளன் கதாபாத்திரம் என கூறப்படுகிறது.
இது சரித்திர படம் என்பதால் அதிகபடியான நடிகர்-நடிகைகள் இடம் பெறுகின்றார்களாம். விஜய்யின் கம்பீர தோற்றத்தைப் பார்த்து ஒட்டுமொத்த படக்குழுவும் வியந்துபோய் உள்ளதாம்.
வித்தியாசமான பாண்டஸி கதைகளை தேர்தெடுத்து ரசிகர்களின் மனதை கவர்ந்த இயக்குனர் சிம்புதேவனின் இத்திரைப்படமும் ரசிகர்களை கவருவதொடு 100 கோடி கிளப்பிலும் இணையும் என்று இப்போதே முனுமுனுக்கப்படுகிறது..

No comments:

Post a Comment