Wednesday, 3 December 2014

கலைத்த ரசிகர் மன்றங்களை திரும்பவும் ஆரம்பிக்க அஜித் திட்டம்



இன்றைய சூழலில் பல பெரிய மற்றும் சிறிய நடிகர்களுக்கும் தங்களது பெயரில் ரசிகர் மன்றங்கள் வைத்துள்ளனர். அதில் ஒருசிலரை தவிர பெரும்பான நடிகர்கள் தங்களது ரசிகர்களை எப்போதுமே சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இந்த நடிகர்கள் தங்கள் படங்கள் ரிலீசாகும்போது, ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டுவது. 

திரையரங்குகளில் தங்களுக்கு ராட்சத கட்-அவுட்கள் வைத்து பாலபிஷேகம் செய்வது போன்ற விஷயங்களுக்காகத்தான் ரசிகர் மன்றங்களை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ரசிகர் மன்றங்களை தங்களுக்கு பெரிய பலம் என்று பெருவாரியான நடிகர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அஜித் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு ஒரு முடிவை எடுத்தார். தனக்கிருந்த ரசிகர் மன்றங்கள் அனைத்தையும் கலைத்தார். இருப்பினும் ரசிகர்கள் அவரை விடுவதாக இல்லை. அவரது பிறந்த நாள் மற்றும் படங்கள் வெளியாகும்போது தாங்களது சொந்த பணத்திலேயே கட்அவுட்கள் வைத்து வருகிறார்கள். 

அஜித்தின் சமீபத்திய படங்களும் முன்பை விட வசூலை வாரிக்குவித்து வருகின்றன. இது அஜித்துக்கு நெருடலை ஏற்படுத்தியுள்ளது. மன்றமே இல்லேன்னு சொல்லியும் தன் மீது இவ்வளவு அன்பும், உயிரும் வைத்திருக்கும் ரசிகர்களுக்காக மீண்டும் ரசிகர் மன்றத்தை நடத்தலாமா? என்று தனது சகாக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறாராம் அஜித். மீண்டும் மன்றம் ஆரம்பித்தால் அதை எப்படி நடத்த வேண்டும், மன்றத்தில் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என கூடவே பல நிபந்தனைகளையும் போடப் போகிறாராம் அஜித். 

மீண்டும் ரசிகர்மன்றத்தை திறந்தால் அதில் உறுப்பினர்களாக உள்ள ரசிகர்கள் நற்பணியை மட்டுமே செய்ய வேண்டும். எந்தவொரு அரசியல் கட்சிக்கும் மன்றம் சார்பிலோ தனிப்பட்ட முறையிலோ ஆதரவு அளிக்கக் கூடாது. அதேபோல எந்த ஒரு அரசியல் கட்சியுடன் ரசிகர் மன்றக்கொடியையும் சேர்த்து பறக்க விடக் கூடாது என்று இப்படி பல கண்டிஷன்கள் போடப்பட உள்ளதாம். ரசிகர்கள் அஜித்தை அரசியலுக்கு வரவேண்டும் என்று கோஷம் போடாமல் இருந்தால் சரி.

No comments:

Post a Comment