Monday 1 December 2014

வீட்டில் கேக் செய்யலாம்


தேவையான பொருட்கள்
மைதா - 1 1/2 கப்
சூரியகாந்தி எண்ணெய் - 1/2 கப்
ஆப்ப சோடா - 1/2 ஸ்பூன்
பேகிங் பவுடர் - 1/2 ஸ்பூன்
வெண்ணிலா எசன்ஸ் - 1 ஸ்பூன்
பால் - 1 கப்
பொடித்த சக்கரை - 1 கப்
சமையல் கலர் - 1 சிட்டிகை ( விருப்பபட்டால் ).

செய்முறை
ஒரு அகலமான பத்திரத்தில் மைதா, ஆப்ப சோடா, பேகிங் பவுடர், பொடித்த சக்கரை அனைத்தையும் கலந்து, மாவு சல்லடை மூலம் சலித்து கொள்ளவும். பிறகு அதில் எண்ணெய், வெண்ணிலா எசென்ஸ், கலர் சேர்த்துக் கொள்ளவும். பின் பாலை அதனுடன் சேர்த்து கட்டியில்லாமல் இட்லி மாவு பதத்திற்கு கிளறவும். மாவு கட்டியாக இருந்தால் சிறிது பால் சேர்த்து கொள்ளலாம்.
குக்கரில் ஆற்று மணலை பாதி அளவு நிரப்பி அடுப்பில் வைக்கவும். (கண்டிப்பாக வீடு கட்டுவதற்கு உபயோகப் படுத்தும் சலித்த ஆற்று மணல் தான் தேவை).

ஒரு கணமான அலுமினிய பாத்திரத்தில், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பாத்திரத்தில் எல்லா இடத்திலும் பரவுமாறு தடவவும். கேக் ஒட்டாமல் வருவதற்காக, அதன் மேல் சிறிதளவு மைதா மாவை தூவவும். ஏற்கனவே கலந்து வைத்த கேக் கலவையை அந்த பாத்திரத்தில் ஊற்றவும்.
எப்பொழுதும் கேக் பாத்திரத்தின் பாதி அளவுக்கு தான் மாவை ஊற்ற வேண்டும், அப்போது தான் கேக் எழும்பி வரும்.
கேக் பாத்திரத்தை குக்கரில், மணல் மீது வைத்து மூடவும். குக்கரில் விசில் போட கூடாது. குக்கர் மூடியில் உள்ள கேஸ்கட் வளையத்தைப் போட வேண்டாம். 30 நிமிடம் கழித்து குக்கரை அனைத்து விடவும். கீழே இறக்கி வைத்து 10 நிமிடம் கழித்தால் கேக் சாப்பிடத் தயார்.

குறிப்பு


கேக்கின் அளவை பொறுத்து கேக் வேகும் நேரம் சற்று மாறுபடலாம். எனவே 25 நிமிடம் கழித்தவுடன், குக்கரை திறந்து இட்லி வெந்து இருக்கா என்று பார்ப்பது போல் ஒரு கத்தியால் குத்தி பார்க்கவும். மாவு ஒட்டாமல் வந்தால் கேக் வெந்து விட்டது என்று அர்த்தம். ஓட்டினால் இன்னும் சிறிது நேரம் வேக வைக்கவும். குக்கரில் கேக் கலவைப் பாத்திரத்தை வைக்குமுன் மணலைச் சூடு செய்ய வேண்டாம்.

No comments:

Post a Comment