ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ஐ படத்தை பல கோடி
செலவில் தயாரித்து வரும் ஆஸ்கார் ரவிசந்திரன் பணப்பிரச்சனையில் சிக்கி தவித்து
வருகிறார். எனவே, இந்தமுறை
அவரால் மீண்டு வர முடியாது என்று திரையுலகினர் ஆருடம் சொல்லிக்கொண்டிருக்க, ஆஸ்கார் ரவியோ கடந்த சில தினங்களாக, ஐ படம் பொங்கல் வெளியீடு என்று
விளம்பரம் செய்து வருகிறார்.
அதுமட்டுமல்ல, தமிழில் மட்டுமல்ல தெலுங்கு
கன்னடம் மலையாளம் ஹிந்தி சைனீஸ் ஆங்கிலம் என உலகம் முழுக்க உள்ள முக்கால்வாசி
தியேட்டர்களிலும், ஐ படத்தை
ரிலீஸ் செய்யப்போவதாக சொல்லிக்கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில் ஐ படம் தெலுங்கில்
மனோகரடு என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. மனோகரடு படத்தை பொங்கல்
அன்று படத்தின் ஆந்திராவில் வெளியிடவிடக்கூடாது என்ற எண்ணத்தில் அங்குள்ள சில
முன்னணி தயாரிப்பாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்களாம்.
தமிழ் டப்பிங்
படங்களால் நேரடித் தெலுங்குப் படங்களின் வசூல் பாதிக்கப்படுவதால் இப்படி ஒரு
முடிவை எடுத்திருக்கிறார்களாம். பொங்கல் அன்று தெலுங்கில் வெங்கடேஷ், பவன் கல்யாண் நடிக்கும் கோபாலா
கோபாலா மற்றும் ஜுனியர் என்டிஆர் நடிக்கும் டெம்பர் ஆகிய இரண்டு பெரிய பட்ஜெட்
படங்கள் வெளியாக உள்ளன.
இந்த இரண்டு படங்களின் வசூலை ஐ படத்தின் தெலுங்கு
டப்பிங்கான மனோகரடு காலி பண்ணிவிடக்கூடாது என்பதால், மனோகரடு படத்தை பொங்கலன்று
வெளியிடக் கூடாது, ஜனவரி
மாதக் கடைசியிலோ, அல்லது
பிப்ரவரி மாதத்திலோ வெளியிடட்டும் என்கிறார்களாம். இந்த தகவலை அறிந்து
இடிந்துபோயிருக்கிறாராம் ஆஸ்கார் ரவி.
No comments:
Post a Comment