Tuesday 2 December 2014

எண்ணெய் தேய்த்து குளிப்பதன் பலன்கள்


பிறந்த குழந்தைக்கு காலையில் எழுந்ததும், அதன் தாய் செய்கிற விஷயம், உச்சந்தலையில் எண்ணெய் வைப்பது. குழந்தை வளர வளர இந்தப் பழக்கம் மெல்ல மறைகிறது. இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும், தலையில் எண்ணெய் வைத்துக் கொள்வதை நாகரிகக் குறைவாக நினைக்க ஆரம்பிக்கிறார்கள் பிள்ளைகள்.
எண்ணெய் குளியலையும் தவிர்க்கிறார்கள். எண்ணெய் தேய்த்துக் குளித்தால் முகமெல்லாம் எண்ணெய் வழியும் என்பது பரவலான குற்றச்சாட்டு. சரியான முறையில் எண்ணெயைத் தேய்ப்பதும், பிறகு சரியான முறையில் குளிப்பதும் இந்தப் பிரச்சனையைத் தவிர்க்கும்.
பெண்களுக்கு
ஞாயிறு எண்ணெய் தேய்த்து குளித்தால் வடிவமும் அழகும் போய்விடும். 
உங்களுக்கு எந்த எண்ணெய் பிடிக்குமோ, ஒப்புக் கொள்ளுமோ அதை தலை, உடல், கை, கால் என முழுக்கத் தடவுங்கள். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு என்று நாட்கள் உள்ளன. ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் செய்ய வேண்டும்.
விரைந்த செயல்பாடுகள், சடங்குகள், மங்கல நிகழ்ச்சிகள் சனிக்கிழமைகளில் செய்வது வழக்கமில்லை. எனவே ஓய்வை உண்டாக்கும் எண்ணெய் குளியலை சனியன்று செய்வது நல்லது. பெண்களுக்கு சனியை விட சுக்ரனின் உதவி அதிகம் தேவை.
செவ்வாயும், வெள்ளியும் பெண்களுக்கு உகந்த கிரகங்களின் நாட்கள். எனவே இந்தக் கிழமைகளில் பெண்கள் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது
திங்கள் எண்ணெய் தேய்த்து குளித்தால் அதிகப் பொருள் சேரும். *செவ்வாய் எண்ணெய் தேய்த்து குளித்தால் துன்பம் வரும். 
புதன் எண்ணெய் தேய்த்து குளித்தால் மிக புத்தி வந்திடும். 
வியாழன் எண்ணெய் தேய்த்து குளித்தால் உயரறிவு போய்விடும். *வெள்ளி எண்ணெய் தேய்த்து குளித்தால் செல்வம் மிகும். 
சனி எண்ணெய் தேய்த்து குளித்தால் ஆயுள் அதிகமாகும். 
மேற்கண்டவையாவும் பெண்களுக்கு.
ஆண்களுக்கு
சாஸ்திரங்கள் ஆண்கள் சனிக்கிழமைகளில் எண்ணெய் நீராடுவது உசிதம் என்கின்றன. காரணம் சனி அசதி, சோம்பேறித்தனம் நிறைந்த தமோ குணத்தின் அதிபதி. எண்ணெய் குளியல் முடிந்த பின் மனிதனின் சுறுசுறுப்பு குறைந்து அசதியும், உறக்கமும் ஏற்படும்.
ஆண்கள் சனி, புதன் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது 
ஆண்களுக்கு, திங்கட்க்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முடக்கு வாதம் வரும் 
செவ்வாய் கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முதுகு பாலை நோய் வரும். 
வியாழக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் கால் குடைச்சல் வரும். 
வெள்ளிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முட வாதம் வரும். நம் முன்னோர்கள் சனியையும், புதனையும் ஏன் தேர்தெடுத்தார்கள். மற்ற செல்வங்களை விட அறிவினையும்,உடல் நலத்தினைத்தான் உயர்வாக நினைத்தார்கள்- மதித்தார்கள். 
எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது குளிர்ந்த நீரில் குளிக்க கூடாது. வெதுவெதுப்பான சுடுநீரில்தான் குளிக்க வேண்டும்.


No comments:

Post a Comment