Wednesday 10 December 2014

இலவசமாக பேச கால் பிளஸ் அப்


ஆன்ராய்டு தொழில்நுட்பம் வந்ததிலிருந்து ஏகப்பட்ட ஆப்கள் வருகின்றன அந்த வகையில் மொபைல்களுக்கு மட்டுமின்றி லேண்ட்லைன் போன்களுக்கும் இலவசமாக பேசுவதற்கு கால் பிளஸ் என்ற அப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆண்டிராய்டு மற்றும் ஆப்பிள் இயங்குதளங்களில் பயன்படுத்தக்கூடிய இந்த அப் மூலம் அமெரிக்கா, மெக்சிகோ, சீனா, பிரேசில், வங்கதேசம் நாடுகளை சேர்ந்த எண்களுக்கும் இந்தியாவில் உள்ள எண்களுக்கும் பேசமுடியும். வைபர் போன்ற அப்களில் பேசுவதற்கான வசதி இருந்தும், பேசும் இருவருமே இந்த அப்பை நிறுவியிருக்க வேண்டும்.


ஆனால், கால் பிளஸ்-ல் எண்களுக்கு நேரடியாக பேசலாம் என்பதால், அழைப்பை பெறுபவர் இந்த அப் நிறுவியிருக்கவேண்டும் என்ற  அவசியம் இல்லை. ஆனால், இந்தியாவுக்குள் இலவசமாக பயன்படுத்த முடியாது இதுதான் வருத்தம் தரும் விஷயம்.

No comments:

Post a Comment