"உண்மை ஒருநாள் வெல்லும்,
இந்த உலகம் உன் பேர் சொல்லும்
அன்று ஊரே போற்றும் மனிதன் நீயே நீயே,
பொய்கள் புயல் போல் வீசும்
உண்மை மெதுவாய் பேசும்
அன்று நீயே வாழ்வில் வெல்வாய்..." இந்த படலை வைரமுத்து சரியாகத்தான் ரஜினிக்கு எழுதியிருக்கிறார்.

ஆம் கடந்த 12ஆம் தேதி உலகம் முழுவதும் மிகவும் பிரமாண்டமாக வெளியான சூப்பர்
ஸ்டார் ரஜினியின் லிங்கா வெளியான மூன்றே நாட்களில் ரூ.100 கோடிக்கும்
மேல் வசூல் செய்து இதுவரை எந்த தமிழ் திரைப்படமும் செய்யாத சாதனையை செய்துள்ளது.
இனிமேலும் இந்த சாதனையை முறியடிக்க இன்னொரு ரஜினியின் படம்தான் வரவேண்டும் என்று நிலை மாறிவிட்டது.
லிங்கா வெளியான தினத்தில் பெரும்பாலான ஊடகங்கள் நேர்மையான மற்றும் நேர்மறையான விமர்சனங்களை கொடுத்துக்கொண்டிருந்த நிலையில் ஒருசிலர் மட்டும் வேண்டுமென்றே எதிர்மறை விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்தனர். பொய்யான சில தகவல்களை கூறி லிங்கா படம் படுதோல்வி அடைந்துவிட்டதுபோல் ஒரு மாயையை ஏற்படுத்தினர்.

முதல் நாள் பரவிய வதந்தி இரண்டாவது நாள் கொஞ்சம் வலுவடைந்தாலும் மூன்றாவது நாள் அடியோடு நொறுங்கிப்போனது என்பதுதான் உண்மை. மூன்றே நாட்களில் லிங்காவின் வசூல் ரூ.100 கோடியை தாண்டிவிட்டது என்று பாக்ஸ் ஆபீஸ் செய்திகள் வெளிவந்ததும் புரளியை கிளப்பியவர்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயினர். அதுதான் சூப்பர் ஸ்டாரின் மக்களிடம் இருக்கும் செல்வாக்கு.
நேற்று திங்கட்கிழமை வாரத்தின் முதல் வேலைநாளாக இருந்தும் அனைத்து தியேட்டர்களும் ஹவுஸ்புல் ஆனதில் இருந்தே படம் சூப்பர் ஹிட் என்பது நிரூபணம் ஆகிவிட்டது. ஒரு திரைப்படத்தினை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு ஆனால் வேண்டுமென்றே கேவலமாக விமர்சிப்பது முற்றிலும் தவறு.
No comments:
Post a Comment