Tuesday 23 December 2014

பெண்களே உங்கள் காதலன் உங்களிடம் உண்மையாக இருக்கிறரா?


இந்த இணைய உலகத்தில் எது எப்போது மாறும் என்றே சொல்ல முடியாத அளவிற்கு மாற்றங்கள் உண்டாகின்றன. “மாற்றம் ஒன்று தான் மாறாதது” என்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சும்மாவா சொன்னார்.
காதலில் பெண்களை பொறுத்தவரையில் சந்தேகப்படும் மனோபாவம் இருக்கும் இதற்கு ஆண்கள் காரணமாக இருப்பார்கள், இதற்கு நிறைய காரணமாக இருக்கலாம்.

பெண்களே உங்கள் காதலன் உங்கள் மீது உண்மையாகவே அன்பு வைத்துள்ளாரா இல்லையா என்று நீங்களே எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

Watsapp

இன்று Watsapp பயன்படுத்தாத இளைஞர்கள் என்று யாரும் இல்லை, தன் இருப்பை மறைக்காமல் இருந்தால் உங்களிடம் உண்மையாக இருக்கிறார் என்று நீங்களே புரிந்துகொள்ளலாம்.

“அந்த நாட்கள்”

உங்களுக்கு பிரச்சினையான “அந்த நாட்களில்” அவர் ஆதரவாகவும், அனுசரித்து நடந்துகொண்டாலும் அவர் உங்களிடம் உண்மையாக இருக்கிறார் என்று அர்த்தம்.

செல்பேசிக்கு பாஸ்வேர்ட்(Password) பயன்படுத்த மாட்டார்

செல்பேசிக்கு பாஸ்வேர்ட் பயன்படுத்தாதவர்கள் யார் இருக்கிறார்கள் என்று கேட்பது புரிகிறது. அப்படி பயன்படுத்தினாலும் அது உங்கள் பெயர் அல்லது உங்களுக்கு சம்பந்தப்பட்ட வார்த்தையாக இருக்கலாம், மேலும் உங்களிடம் மட்டுமே பகிர்ந்துகொண்டால் உங்களிடம் உண்மையாகவே இருக்கிறார்.

முகநூளில் “Relationship” அறிவிப்பு

உங்களுடன் முகநூளில் Relationship இல் இருப்பதாகவும் அறிவித்தார் என்றாலும்கூட உங்கள் காதலர் உங்களை நேசிக்கிறார் என்று அர்த்தம்.

திருமணத்திற்கு முன் நெருக்கம்

இப்போதெல்லாம் திருமணத்திற்கு முன்பே “நெருக்கமாக” இருக்கிறார்கள், ஆனால் உங்கள் காதலர் உங்களுக்கு “அதில்” விருப்பம் இல்லை என்றால் “அதற்கு” வற்புறுத்தாமல் திருமணம் வரை காத்திருந்தால் நீங்கள்தான் கொடுத்து வைத்த மகராசி. இப்படிபட்ட ஆணுக்கு நீங்கள் காலம் முழுவதும் கூட அடிமையாக இருக்கலாம்.

நீங்கள் அழைக்கும் தருணத்தில்

நீங்கள் எப்போது அழைத்தாலும் செல்பேசியில் எதிர்முனையில் தயாராக இருந்தால் அவரை எக்காரணம் கொண்டும் இழந்து விடாதீர் பெண்களே. அவர் உங்களிடம் உண்மையாகவே இருக்கிறார்.

கடவுச்சொல்(Password)

தன்னுடைய Email, Phone, facebook போன்ற கடவுச்சொல்லை உங்களிடம் பகிர்ந்துகொண்டால் உங்களை நம்புகிறார் மிகவும் நேசிக்கிறார் என்று அர்த்தம்.

பகிர்தல்

தன்னுடைய முக்கியமான விஷயங்களை உங்களிடம் மறைக்காமல் தெரிவித்தாலும் அவர் உங்களிடம் உண்மையாக இருக்கிறார் என்று அர்த்தம்.

சரி இப்போதே பெண்களுக்கு தெரிந்திருக்கவேண்டும் உங்கள் காதலர் உங்களிடம் எவ்வளவு உண்மையாக இருக்கிறார் என்று. 

No comments:

Post a Comment