Tuesday, 2 December 2014

திருட்டு விசிடிக்கு எதிரான பேரணி, ஆர்ப்பாட்டங்கள் ரத்து


திருட்டு விசிடிக்கு எதிரான இந்த பேரணி, ஆர்ப்பாட்டத்தில் திரையுலகின் அனைத்து சங்கங்கள், அமைப்புகள், கலைஞர்கள் பங்கேற்பார்கள் என்று இரு வாரங்களுக்கு முன்பு நிர்வாகிகள் அறிவித்திருந்தனர். 

இதற்கான முறையான அனுமதி கேட்டும் காவல் துறையிடம் மனு கொடுத்திருந்தனர். ஆனால் இதற்கு அனுமதி தருவது குறித்து அரசிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் இப்போது வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டதால், அமைதியாகிவிட்டதாகத் தெரிகிறது. 

திருட்டு விசிடியை ஒழிக்கக் கோரி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இதுபோன்ற போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை திரையுலகினர் நடத்தி வந்தாலும், திருட்டு விசிடி விற்பனை மற்றும் இணையதளங்களில் திருட்டுத்தனமாக படங்கள் வெளியாவதை முழுமையாகத் தடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து திருட்டு விசிடிக்கு எதிராக திரையுலகினர் இன்று நடத்தவிருந்த பேரணி, ஆர்ப்பாட்டங்கள் கைவிடப்பட்டன. 
அரசுத் தரப்பிலிருந்து திரையுலகினருக்கு எந்த அனுமதியும் கிடைக்காததாலேயே இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

No comments:

Post a Comment