Friday 9 January 2015

லிங்கா நஷ்டம் என பொய்ப் பிரச்சாரம் செய்யும் விஷம கும்பலுக்கு ரசிகர்களின் 10 கேள்விகள்!


லிங்கா விநியோகஸ்தரான வேந்தர் மூவீஸிடமிருந்து இடைத் தரகராக நின்று படத்தை வாங்கி வெளியிட்ட சிங்கார வேலன் மற்றும் அவருக்கு துணை போகும் சிலருக்கு ரசிகர்களான நாங்கள் முன்வைக்கும் 10 கேள்விகள்… உங்களை கேள்வி கேட்க எங்களை விடவும் தகுதியானவர்கள் யாருமில்லை. காரணம் இந்தப் படத்தை குறைந்தது ரூ 250 முதல் அதிகபட்சமாக ரூ 1000 வரை காசு கொடுத்து பார்த்து உங்கள் கல்லாவை நிரப்பியவர்கள் நாங்களே…

1. லிங்கா முதல் நாள் திருச்சி தஞ்சையில் 126000 இருக்கையில் 76000 தான் நிரம்பியது என்கிறார். இது ரஜினி படங்களுக்கு சாத்தியமா? முதல் மூன்று நாட்கள் ரஜினி படங்களுக்கு எவ்வளவு கூட்டம் இருக்கும் என்று அனைவரும் அறிந்தது. லிங்காவுக்கு ப்ளாக்கில் கூட டிக்கெட் கிடைக்காமல் திரும்பியவர்களே அதிகம்.

2. நான்காவது நாளே 4 கோடி வசூல் ஆகியது என்கிறார். ஆனால் 25 வது நாளும் அதையேதான் கூறுகிறார். அப்படியெனில் இடைப்பட்ட நாட்களில் ஓடியதெல்லாம் காலியாகத்தானா? 25 நாட்கள் காலியாகவே ஓட்டும் அளவுக்கு தியேட்டர்காரர்கள் நல்லவர்களா?

3. 8 கோடிக்கு வாங்கிய இவர் எத்தனை கோடிக்கு மற்றவர்களுக்கு விற்றார்? மயிலாடுதுறையில் ஒரு திரையரங்கம் ரகூ 25 லட்சம் கொடுத்துள்ளது. பட்டுக்கோட்டையில் ரு 30 லட்சம். மொத்தம் 55 அரங்குகள்.. எத்தனை கோடியை இந்த சிங்கார வேலன் வசூலித்திருக்கிறார் என்பதை கணக்கிட முடிகிறதா?

4. முதல் மூன்று நாளில் அனைத்து டிக்கெட்டுகளையுமே சராசரியாக ரூ 250- 300-க்கு விற்ற கணக்கை ஏன் காட்ட மறுக்கிறார்கள்? ஒரு படம் இரண்டாம் நாளே தோல்வி என்றால் 30 நாட்கள் எப்படி காலியான 21 திரையரங்குகளில் (திருச்சி – தஞ்சை) ஓட முடியும்?

5. கன்னட தயாரிப்பாளர் கொள்ளை அடித்துச் செல்கிறார் என்று கூறும் இவர் ஏன் கன்னட தயாரிப்பாளர் படம் என்று தெரிந்தும் எட்டுக் கோடி கொடுத்து படத்தை வாங்கினார்?

6. படத்தின் வசூலை விட, தொடர்ந்து துவக்கத்தில் இருந்து ரஜினியை, அவர் இமேஜை மட்டுமே தரக்குறைவாக பேசி வருவது ஏன்? அவரை குறிப்பிட்டு தாக்கி வருவது ஏன்? யாருக்காக இந்த வேலை பார்க்கிறார் இந்த நபர்?

7. படம் வெளியாகி ஒரு வாரம் கூட முடியாத நிலையில், நன்றாக ஓடிக்கொண்டு இருந்தும் நான்காவது நாளே எதற்கு நட்டம் என்று கூற வேண்டும். இது படத்தின் வசூலை பாதிக்கும் என்று ஒரு விநியோகஸ்தருக்குத் தெரியாதா! இவர் கூற்றுபடியே நட்டம் என்றாலும், இது போல நடந்து கொண்டால் இன்னும் கூடுதல் நட்டம் தானே ஏற்படும். அப்படி இருக்கும் போது இது போல எப்படி ஒரு விநியோகஸ்தர் கேட்பார்! இதில் என்ன லாஜிக் இருக்கிறது? இவர் உண்மையில் விநியோகஸ்தர்தானா? அல்லது வேறு யாருக்காகவாவது வேலை பார்க்கும் கைக்கூலியா?

8. சிங்காரவேலன் ஏன் தன் சங்கத்தை அணுகாமல் தொடர்ந்து YouTube, Whatsapp இணைய ஊடகங்கள் வழியே பிரச்சாரம் செய்து வருகிறார்? இவர் நோக்கம் நஷ்ட ஈடு கேட்பது போலத் தெரியவில்லையே?

9. தமிழகத்தில் கொள்ளை அடித்து கர்நாடகா கொண்டு செல்கிறார்கள் என்று கூறும் இவர் ஏன் அதற்கு துணை போவது போல இந்தப் படத்தை வாங்கினார். ஒருவேளை இவருக்கு இவர் நினைக்கும் லாபம் கிடைத்து இருந்தால்… கூடுதல் பணம் கர்நாடகாவிற்குப் போகுமே.. அப்போது மட்டும் கர்நாடகாக்கு பணம் செல்வது சரியா?

10. ஒரு வியாபாரத்தில் பணம் சம்பந்தப்பட்ட விசயத்தை ஏன் சம்பந்தமே இல்லாமல் இரு மாநிலப் பிரச்சனை ஆக்க முயற்சிக்கிறது சிங்கார வேலன் அன்ட் கோ?

- இந்தப் பத்துக் காரணங்களை முன்வைத்து உங்கள் மீது ஏன் பொது நல வழக்கு தொடரக் கூடாது?

-இப்படிக்கு
தலைவர் ரஜினியின் ரசிகர்கள்

பதில் சொல்லுங்கள் சிங்காரவேலன் அன் கோ!

No comments:

Post a Comment