செய்யத் தேவையான பொருட்கள்
சிக்கன் – அரை கிலோ
பிரியாணி அரிசி – அரை கிலோ
வெங்காயம் – ஐந்து
தக்காளி – நான்கு
பச்சை மிளகாய் – ஆறு
மிளகாய் தூள் – தேவைக்கேற்ப்ப
ஏலக்காய், இலவங்கம் – ஐந்து
பட்டை – இரண்டு
முந்திரி – பத்து
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – பத்து பல்
தயிர் – தேவைக்கேற்ப்ப
கரம் மசாலா – தேவைக்கேற்ப்ப
புதிய தேங்காய் பால் – அரை கப்
எலுமிச்சை – ஒரு பழம்
எண்ணெய் – தேவைக்கேற்ப்ப
நெய் – 2 தேக்கரண்டி
கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள்
உப்பு தேவைக்கேற்ப்ப
செய்முறை
முதலில் பிரியாணி அரிசி வேக வைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு வெங்காயம் மற்றும் தக்காளியை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
பச்சை மிளகாய் இரண்டாக அரிந்து கொண்டு, இஞ்சி, பூண்டினை துருவி கொள்ளளுங்கள். புதிய தேங்காய் பால் 2 கப் எடுத்து தயாராக வைத்து கொள்ளுங்கள். பிறகு 2 தேக்கரண்டி நெய்யில், முந்திரியை பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு வாணலியில் எண்ணய் சேர்த்து ஏலக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டை சேர்த்து வெடிக்கும் வரை காத்திருந்து பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். இதில் பாதி வெங்காயத்தை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும் (இறுதியாக பயன்படுத்த உதவியாக இருக்கும்) இப்பொழுது, இஞ்சி, பூண்டை சேர்த்து நன்கு வதக்கவும், தயிர், தக்காளி, உப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும். கரம் மசாலாதூள், சிவப்பு மிளகாய் தூள், கோழி துண்டுகள் இவற்றை சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வறுக்கவும்.
தேங்காய் பால் சேர்த்து கோழி வேகும் வரை மூடி வைத்து சமைக்கவும்.
குழம்பு கெட்டியானவுடன், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள் சேர்க்கவும்.
வேக வைத்த சாதத்துடன், இந்த கோழி கறி மசாலா சேர்த்து பார்த்து பதமாக கிளறி விடவும்.கடைசியாக வறுத்த முந்திரி, வறுத்த வெங்காயம் சேர்த்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
இதோ பிரியாணி தயார்! அவ்ளோதாங்க
பிரியாணி.
No comments:
Post a Comment