Thursday 4 December 2014

காக்கிச்சட்டை பாடல் வெளியீட்டு தேதி ஒத்திவைப்பு


மான் கராத்தே படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘காக்கிச்சட்டை’. இப்படத்தை ‘எதிர்நீச்சல்’ படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார். ‘எதிர்நீச்சல்’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனும், துரை செந்தில்குமாரும் மீண்டும் இணைந்திருக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இவரும் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்திருக்கும் இரண்டாவது படம் இது. 

'காக்கிச்சட்டை' படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் டிசம்பர் 5-ந் தேதி வெளியிடப் போவதாக இருந்தது. ஆனால், இப்படத்தின் ஒரேயொரு பாடல் மட்டும் இன்னும் முடிவடையாததால் பாடல் வெளியீடு தள்ளிப் போகும் எனக் கூறப்படுகிறது. 

No comments:

Post a Comment