மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
நீதி, நேர்மை தவறாமல் நடக்கும் பண்பும் ஏழை எளியவர்களுக்கு உதவிசெய்யும் ஆற்றலும்கொண்ட மீன ராசிக்காரர்களே! இந்த ஆண்டு முழுவதும் ஓரளவுக்கு முன்னேற்றத்தினை ஏற்படுத்தும். இதுமட்டுமின்றி இந்த ஆண்டின் முற்பாதியில் உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை, திருமண சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு உண்டாகும். எடுக்கும் முயற்சிகளனைத்திலும் வெற்றிமேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். புத்திரவழியிலும் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். அசையாச் சொத்து வகையில் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் அனுகூலப் பலன்களையும் பெறுவீர்கள். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். ஆன்மிக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் எதிர்பார்த்த லாபத்தினை அடைந்துவிட முடியும். பணம் கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெறுவீர்கள். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடனிருப்பதும், ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதும் நல்லது. தெய்வ தரிசனங்களுக்காகப் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும்.
ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்துவிடக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். குரு பஞ்சம ஸ்தானத்திலிருப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. இதனால் மருத்துவச் செலவுகளும் உங்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதன்மூலம் அலைச்சல்களை குறைத்துக்கொள்ள முடியும்.
குடும்பம், பொருளாதார நிலை
குடும்பத்தில் பொருளாதார நிலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகச் சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணவாழ்க்கை எளிதில் அமையும். அசையாச் சொத்து வகையில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதன் மூலம் லாபம் கிட்டும். புத்திரவழியில் மகிழ்ச்சியும் கணவன் மனைவியிடையே ஒற்றுமையும் அமையும். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வதும் மற்றவர்களிடம் கவனமுடனிருப்பது நல்லது.
வேலை
உத்தியோகஸ்தர்களுக்கு ஆண்டின் தொடக்கமானது. அற்புதமான பதவி உயர்வுகளையும், பாராட்டுதல்களையும் அள்ளித் தருவதாக அமையும். திறமைக்கேற்ற கௌரவமான நிலையினை அடைவீர்கள். பொருளாதார நிலையும் ஊதிய உயர்வுகளால் மேம்படும். புதிய வேலைவாய்ப்பும் எதிர்பார்த்தபடியே கிட்டும். நல்ல நிர்வாகத்திறனும் பலரை அதிகாரம் செய்யக்கூடிய ஆற்றலும் உண்டாகும். ஜூலை 5-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு ருண, ரோக ஸ்தானத்திற்கு மாறுதலாக இருப்பதால் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம்செலுத்துவது உங்களின் கௌரவத்துக்கு நல்லது.
தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரரீதியாக ஏற்றமிகு பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிட்டும். எந்தவித மறைமுக எதிர்ப்புகளையும் வெல்லக்கூடிய ஆற்றலும் உண்டாகும். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி குரு 6-ஆம் வீட்டுக்கு மாறுதலாகவிருப்பதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யநினைக்கும் காரியங்களை ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுத்துவது நல்லது.
பெண்கள்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் மணமாகாத கன்னியருக்கு சிறப்பான மணவாழ்க்கை அமையும். சிலருக்கு அழகான புத்திர பாக்கியம் அமையும். குடும்பத்திலும் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகையால் நற்பலன்கள் அமையும். பூர்வீகச் சொத்துகளால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமானதாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். குரு மாற்றத்திற்குப் பிறகு எதிலும் சிந்தித்துச் செயல்படுவது, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
பணம்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவை சரளமாக இருக்கும். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளிலும் தாராளமாக லாபம் கிட்டும். பெரிய முதலீடுகளையும் தடையின்றி ஈடுபடுத்த முடியும். என்றாலும் வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவிருக்கும் குரு மாற்றத்திற்குப் பிறகு கொடுக்கல் வாங்கலில் வீண் விரயங்களைச் சந்திப்பீர்கள் என்பதால் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்த்துவிடுவது நல்லது.
அரசியல்வாதிகள்
குரு பகவான் இந்த ஆண்டின் முற்பாதியில் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றமுடியும். ஓரளவுக்கு மேன்மையை உண்டாக்கும். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைத் தடையின்றி காப்பாற்றிவிடுவீர்கள். கட்சிப் பணிக்காக எதிர்பாராத வீண் செலவுகளைச் சந்திக்கநேரிடும் என்பதால் பணவிஷயத்தில் கவனம் தேவை.
விவசாயிகள்
விவசாயிகளுக்கு உழைப்புக்கேற்ற பலன்கள் கிடைக்கும் எதிர்பார்த்த வங்கிக் கடன்களும் கிடைக்கப்பெற்று தேவைகள் பூர்த்தியாகும். பூமி, மனை, வாங்கும் யோகம் உண்டென்றாலும் சில தடைகளுக்குப்பின் வாங்குவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்களையும் நிறைவேற்ற முடியும். ஆடு, மாடு போன்ற கால்நடைகளாலும் சிறப்பான லாபம் கிட்டும். கடன்களை அடைக்கக்கூடிய அளவுக்கு ஆற்றலும் உண்டாகும்.
கலைஞர்கள்
இந்த ஆண்டின் தொடக்கமானது கலைஞர்களுக்கு அபரிமிதமான செல்வாக்கினை உண்டாக்கும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். ரசிகர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். உங்களின் திறமைகளுக்கேற்ற கதாபாத்திரங்களும் கிடைக்கப்பெறும். குரு மாற்றத்திற்குப் பிறகு பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவக்கூடுமென்பதால் ஆடம்பரமாக செலவுகள் செய்வதைக் குறைத்துக்கொள்வது நல்லது.
மாணவர்கள்
கல்வியில் நல்ல ஈடுபாட்டுடன் செயல்பட்டு சிறப்பான மதிப்பெண்களைப் பெறமுடியும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். நல்ல நண்பர்களின் நட்பு உங்களுக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கும். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். கல்விக்காக சுற்றுலா தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பும் கிட்டும்.
பரிகாரம்
மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சர்ப கிரகங்களான ராகு- கேது சாதகமின்றி சஞ்சரிப்பதால் சர்ப சாந்தி செய்வது, ராகு காலங்களில் துர்க்கை வழிபாடு, சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது. வரும் 05-07-2015 முதல் குரு 6-ல் சஞ்சரிக்கவிருப்பதால் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது. ஏழை அந்தணர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது உத்தமம். வாழ்த்துக்கள்.
மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சர்ப கிரகங்களான ராகு- கேது சாதகமின்றி சஞ்சரிப்பதால் சர்ப சாந்தி செய்வது, ராகு காலங்களில் துர்க்கை வழிபாடு, சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது. வரும் 05-07-2015 முதல் குரு 6-ல் சஞ்சரிக்கவிருப்பதால் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது. ஏழை அந்தணர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது உத்தமம். வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment