Friday 12 December 2014

ரஜினி 65 பிறந்தநாள் சிறப்பு பகிர்வு


1.சொந்தப்பெயர் : சிவாஜிராவ் கெய்க்வாட்.

2.பிறப்பு: 12.12.1950, இரவு 11.54 மணி.


3.மகர ராசி, திருவோண நட்சத்திரத்துக்கு உரியவர்.


4.பெங்களூரு கோவிபுரம் அரசு கன்னட மாதிரி ஆரம்பப்பள்ளியில் படிப்பு ஆரம்பம்.


5.ஆச்சார்யா பாடசாலா பப்ளிக் ஸ்கூலில் படித்தபோது நாடகங்களில் நடித்து பாராட்டு வாங்கினார்.


6.பி.யு.சி முடித்துவிட்டு கார்பென்டர் மற்றும் கூலிவேலை செய்திருக்கிறார்.


7.பெங்களூரு போக்குவரத்தில் செய்துவந்த கண்டக்டர் வேலையை விட்டுவிட்டு சென்னைக்கு கிளம்பும்போது நண்பர்கள் முன் கதறி அழுதிருக்கிறார்.


8.சென்னை திரைப்படக் கல்லூரியில் படிக்கும்போது தனிமை விரும்பியாகவே இருந்துள்ளார்.


9.அறிமுகமான அபூர்வ ராகங்கள்படத்தில் பேசிய முதல் வசனம்: 'பைரவி வீடு இதுதானே?'

10.ராயப்பேட்டை அறையில் தங்கியிருந்தபோது நண்பர்கள் வட்டம் ஆரம்பித்து அதிகமானது.
11.ஆரம்ப நாட்களில் எவ்வளவு பணம் இருந்தாலும் கையேந்தி பவனில்  சாப்பிடுவதையே விரும்பியவர்.

12.இவரது மனங்கவர்ந்த ஆன்மிக குரு: சச்சிதானந்த ஸ்வாமிகள்.


13.கலர்களில் பிடித்தது கறுப்பு.


14.உடைகளில் பிடித்தது வெள்ளை குர்தா.


15.பிடித்த புத்தகம்: ரமணர் எழுதிய எல்லாமும்.


16.உலகிலேயே மிகவும் பிடித்த நகரம் சென்னை.


17.அடிக்கடி செல்வதற்கு விரும்பும் ஒரே இடம் இமயமலை.


18.உற்சாகமாக இருக்கும்போது, டிரைவரை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டுகாரில் ரவுண்ட் அடிப்பார்.


19.உலகிலேயே பிடித்த நடிகர் கமல்ஹாசன், பிடித்த நடிகை பாலிவுட்  ரேகா.


20.திரையுலகில் நெருக்கமான தோழி ஸ்ரீப்ரியாவுடன் 28 படங்களில்  நடித்துள்ளார்.


21.மாணவர் இதழுக்காக இவரைப் பேட்டியெடுக்க வந்த எத்திராஜ் கல்லூரி மாணவி லதா, அடுத்தடுத்த சந்திப்புகளில் காதலியாகி, மனைவியானார்.


22. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைப் பலமுறை படித்திருக்கிறார்.


23. பிடித்த கவிஞர் கண்ணதாசன்.


24. பிடித்த இசையமைப்பாளர் இளையராஜா.

25. பிடித்த படங்களில் இன்னமும் முதலிடத்தில் இருப்பது  'வீரகேசரி' கன்னடப்படம்.

26. பெங்களூரு சிவாஜி நகரில் ஒரு ரவுடியை அடித்து, ஓட ஓட விரட்டியிருக்கிறார். அதற்காக அண்ணன் சத்யநாராயணாவிடம் அடிவாங்கியுள்ளார்.


27.இவருக்கு ரொம்பவும் பிடித்த அரசியல் தலைவர் சிங்கப்பூர் அதிபர் லீகுவான்-யூ.


28.வீட்டு முகப்பில் 'வாய்மையே வெல்லும்' என்ற வாசகத்தைப் பொறித்து வைத்துள்ளார்.


29.பெங்களூருக்குச் செல்லும்போதெல்லாம் வேட்டி-சட்டை, தலையில் முண்டாசு காஸ்ட்யூமில் நண்பர்களுடன் இரவுக் காட்சி படம் பார்க்க தியேட்டருக்குப் போவார். 


30. 'ஸ்ரீ ராகவேந்திரா' படம் சரியாக ஓடாததால், சில நாட்கள் அவரை வணங்காமல் கோபத்துடன் இருந்தார். படம் 100 நாட்கள் ஓடியது. வணக்கம் தொடர்ந்தது.


31.ஆன்மிக பயணத்துக்காக இமயமலைக்குப் போனாலும், திருவண்ணாமலைக்குச் சென்றாலும் எப்போதும் துணையாகப் போகும் நண்பர்கள் ஹரி மற்றும் வெங்கட்.


32.ஆன்மிகப் பயணம் செல்லும்போது உடைகளை தானே துவைத்துக் கொள்வார்.


33.நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் தவறாமல் இமயமலைக்குச் சென்றுவிடுவார். சென்னை திரும்பியதும் இரண்டு மாத வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வார்.


34.இமயமலைக்குப் போகும்போதெல்லாம் ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆஸ்ரமத்தில்தான் தங்குவார். அங்கு இவருக்கு உதவி செய்பவர் சுப்ரமண்யம் என்கிற மலையாளி.


35.கன்னட நடிகர் ராஜ்குமார் தவிர யாரிடமும் இவர் இதுவரை ஆட்டோகிராஃப் வாங்கியதில்லை.


36. பாடல் வரிகளுக்காக இவரிடம் பலமுறை தங்கச்சங்கிலி பரிசு பெற்றவர் கவிப்பேரரசு வைரமுத்து.


37. ஆன்மிக பயணத்தின்போது ஒரு சாதாரண துணிப்பையில் இரண்டு பழைய சட்டைகள், தையல் பிரிந்த இரண்டு பனியன்கள், ஒரு தொப்பி, கறுப்புக் கண்ணாடி ஆகியவற்றை எடுத்துச் செல்வார்.


38. யோகக் கலையில் தீட்சை பெற்று, பாபா குகைக்குப்போய், ராஜரிஷி பட்டம் பெற்றவர்.


39.வீட்டிலிருந்து இவருக்கு மட்டுமல்லாமல் 25 பேர் சாப்பிடும் அளவுக்கான மதிய விருந்து படப்பிடிப்புத் தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.


40.பத்து லட்ச ரூபாய் நன்கொடை அளித்து திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 148 இடங்களில்சோடி யம் மின் விளக்குகள் பொருத்த உதவினார். அதன் பிறகுதான் கிரிவலத்துக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.


41.வீட்டு பூஜையறையில் காலையில் சுப்ரபாதம் ஒலிக்கும். அதன்பிறகு எப்போதும் 'ஓம்' மந்திரம் ஒலிக்கும்.


42.குளித்து முடித்ததும் ஈரத்துண்டுடன் பூஜையறையில் தியானம் செய்வார்.


43.குட், ஃபைன் என்ற வார்த்தைகள் இவரது பேச்சில் அடிக்கடி இடம்பெறும்.


44.வீட்டுக்கு வந்தவர்களை எழுந்து நின்று வரவேற் பார். அவர்கள் அமர்ந்த பிறகே உட்காருவார்.


45.வீட்டு வேலைக்காரர்களின் இல்ல விசேஷங்களுக்கான மொத்த செலவையும் ஏற்றுக் கொள்வார்.


46.இவர் பூசிக்கொள்ளும் திருநீறு இமயமலையிலிருந்து கொண்டுவரப்படுகிறது.


47.பர்ஸ் வைத்துக் கொள்ளும் பழக்கம் கிடையாது.


48.பெங்களூரு போக்குவரத்துக் கழகத்தில் இவருடன் பணியாற்றிய நண்பர் ராஜ்பகதூரை 'தேவுடா தேவுடா...' பாடல் காட்சியில் ஆடவைத்தார். 


49.சைவத்துக்கு மாறுவதற்கு முன் ஆட்டுக்குடல் வறுவலை விரும்பிச் சாப்பிடுவார்.


50.தீபாவளி ரிலீஸ் தள்ளிப்போய் விடக்கூடாது என்பதற்காக 'தர்மதுரை' படத்துக்காக தொடர்ந்து 60 மணிநேரம் நடித்தவர்.


51.மீடியாக்களுக்கு அனுப்பும் அறிக்கைகளை சொந்தக் கையெழுத்தில், தமிழில் எழுதுவார்.


52.இமயமலையில் ஒரு ரிஷி சொன்ன ஆரோக்ய வாழ்வு அறிவுரையின்படி பால், தயிர், நெய், அரிசி சாதம், தேங்காய் ஆகிய வெள்ளைநிற உணவுப்பொருட்களை தவிர்த்து விடுகிறார்.


53.குசேலன் பட ரிலீசின்போது அமெரிக்காவில் இவரது 25 அடி உயர கட்-அவுட் வைக்கப்பட்டது. இந்தியப் படத்துக்கு அமெரிக்காவில் கட்-அவுட் வைத்தது அதுவே முதல்முறை.


54.இவருக்குச் சொந்தமான சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தினமும் மோர் தானம் நடக்கிறது.


55.மதிய உணவுக்குப் பிறகு தவறாமல் ஒரு பச்சை வாழைப்பழம் சாப்பிடுவார்.


56. கஸல் பாடல்களை விரும்பிக் கேட்பார்.


57. வாரத்துக்கு ஒருமுறை கட்டாயம் எண்ணெய்க் குளியல் உண்டு.


58. சென்னைக் கடற்கரையில் விற்கப்படும் வேர்க்கடலை, மற்றும் பட்டாணி சுண்டலை அவ்வப்பொழுது வாங்கிவரச்சொல்லிச் சாப்பிடுவார்.


59. சில ஆண்டுகளுக்கு முன் நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு, சாமியாராகிவிட முடிவெடுத்து பல ஊர்களில் சுற்றினார். இவரை மீட்டு வந்தவர் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்


60.தன்னைச் சந்திக்க வருபவர்களுக்கு பரிசளிப்பதற்காகவே ஆயிரக்கணக்கான ராகவேந்திரர் படங்களை வாங்கி வைத்துள்ளார்.


61.தமிழ் சினிமா இயக்குனர்களில் எஸ்.பி. முத்து ராமனை மட்டும் அண்ணன் என்று அழைப்பார்.


62.வீட்டு வேலைக்காரர் ஒருவர் தவறு செய்துவிட்டால், பெரிய தொகை கொடுத்து அவரை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்.


63.விழாக்களுக்கு வரும்போது மேக்கப் போடாமல், விக் அணியாமல் இயல்பாக இருப்பார்.


64.வயதில் பெரியவர்களைச் சந்திக்கும்போது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவார்.


65.கடவுள் நல்லவர்களைக் காப்பாற்றுவான். அதற்காக நாம் சும்மா இருந்துவிடக்கூடாது. உண்மையாக உழைக்க வேண்டும் என்பது இவரது கருத்துகளில் ஹைலைட்.

தொகுப்பு: நெல்லைபாரதி

No comments:

Post a Comment