Friday 9 January 2015

புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் பலன்கள்



புரட்டாசி மாதம் பிறந்தவர்கள் பெரும் செல்வத்துடன் வாழ பிறந்தவர்கள். இவர்கள் முதல் போடாமலே சம்பாதிக்கும் வலிமை படைத்தவர்கள். இவர்களின் எதிர்பாராத முன்னேற்றத்தால் மற்றவர்கள் இவர்களைக் கண்டு பொறாமைப்படுவதுண்டு. இவர்களுக்கு தொழில் ரீதியாக பின்னால் என்ன நடக்கும் என்பதை கிரகிக்கும் சக்தி உண்டு. எனவே தொழில் மற்றும் வியாபாரத்தில் இவர்களை வெற்றிகொள்ள யாராலும் முடியாது. கல்வியிலும் இவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. 
அறிவியல் துறையில் ஈடுபட்டால் இவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். புத்தகம் படிப்பதில் இவர்களுக்கு விருப்பம் அதிகமாக இருக்கும். யாராவது தவறு செய்தால் அவர்களை தட்டிக் கேட்கும் குணம் இவர்களிடம் உண்டு. அத்துடன் திரும்பவும் அந்த தவறை செய்யாமல் இவர்கள் பார்த்துக் கொள்வார்கள். இயற்கை எழில் மிகுந்த இடங்களுக்கு சென்று வருவதிலும் இவர்களுக்கு விருப்பம் அதிகம். 
எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் இவர்களிடம் சில குறைகளும் உண்டு. இயற்கையாகவே இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு புத்திசாலித்தனம் அதிகம் இருந்தும்கூட ஒரு லட்சியத்தை மேற்கொண்டு அதை நிறைவேற்ற வேண்டுமென நினைக்கமாட்டார்கள். இவர்களுக்குரிய திறமை இவர்களுக்கே தெரியாமல் போய்விடுவது தான் பெரிய குறையாகும். இவர்கள் சந்தேக மனப்பான்மை மிக்கவர்களாக இருப்பார்கள். 
இப்போதைக்கு கிடைத்தது போதும் என்ற எண்ணமே அதிகமாக இருக்கும். எனவே பின்னால் வரப்போகும் பெரிய லாபத்தை விட்டு விடுவார்கள். இதையெல்லாம் தவிர்த்து ஒரு லட்சியத்துடன் வாழ்ந்தால் இந்த மாதத்தில் பிறந்தவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். இவர்களுக்கு கண்ட கண்ட உணவுப் பொருட்களை சாப்பிடுவதில் விருப்பம் அதிகம். இதைத் தவிர்த்து சத்துள்ள உணவை அளவோடு சாப்பிட்டால் இவர்களது ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 
இந்த மாதத்தில் பிறந்த பெண்களை கணவன்மாருக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இவர்கள் தங்கள் கணவன் வீட்டு வேலை உட்பட அனைத்தும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் குறும்புத்தனம் அதிகமாக இருக்கும். இந்த மாதத்தில் பிறந்த பெண்களில் பலருக்கு செவ்வாய் தோஷம் இருக்கும். எனவே தக்க பரிகாரம் செய்து இவர்களை திருமணம் செய்து கொடுக்கலாம்.

No comments:

Post a Comment