Friday 9 January 2015

எந்திரன் 2 விரைவில்


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் “எந்திரன்”. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் வெளிரவேண்டும் என்று ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் இருகிறார்கள். இயக்குனர் ஷங்கரும் இரண்டாம் பாகத்தை ரஜினியை வைத்து எடுக்கவேண்டும் என்று தன் விருப்பத்தை அவ்வப்போது தெரிவித்த வண்ணம் இருக்கிறார். இப்போது எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க ரஜினிகாந்த், சங்கர் சந்தித்து பேசிவருகிறார்கள்.

இப்போது எந்திரன் படத்தைவிட அதிக பிரம்மாண்டமான முறையில் எந்திரன் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடைபெறுகிறது. அதன்படி எந்திரனாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சைண்டிஸ்டாக அமீர்கானும் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.  

No comments:

Post a Comment