Wednesday 12 August 2015

சிம்புவிற்கு 2016 முதல் யோகம் பிரபல ஜோதிடர்கள் கணிப்பு


பிரபல நடிகர் சிம்பு தற்போது பல சிக்கலில் இருக்கிறார், இதற்கு கரணம் என்ன? எப்போது அவருக்கு யோகமான வாழ்க்கை அமையும்? திருமணம் எப்போது? அவரது வாழ்கை முறை எப்படி இருக்கும்? என்று பிரபல ஜோதிடர் பாராதிதாசன் மணிகண்டன் என்பவர் கணித்து வெளியிட்டுள்ளார். அதன் விபரங்கள் பின் வருமாறு,

1. புதனுக்கு 1, 2, 5, 9, ல் கேது இருந்தால் காதல் உண்டாகும். வக்கிரம் பெற்ற புதனுக்கு 12 ல் கேது இருந்தாலும் காதல் உண்டாகும். இந்த சேர்க்கையில் புதன் மீது குரு அல்லது சுக்கிரன் 1, 5, 9, 3, 7, 11, 2, 12 பார்வை பார்க்க காதல் திருமணம் உண்டாகும். சந்திரன் கலை மற்றும் காதல் காரகன்.

2. ஆண் ஜாதகத்தில் குருவுக்கு 1, 5, 9, 3, 7, 11, 2, 12 ல் சந்திரன் இருப்பின் காதல் ஏற்படும்.

3. பெண் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு 1, 5, 9, 3, 7, 11, 2, 12 ல் சந்திரன் இருப்பின் காதல் ஏற்படும்.

கீழே இருப்பது நடிகர் சிலம்பரசன் ஜாதகன்,
இவரின் குரு இருப்பது விருச்சகத்தில், ஆண் ஜாதகத்தில் குரு இருக்கும் ராசியின் குணங்கள் ஜாதகர் பெறுவார். அதன் படி ஜாதகர் கால புருசனின் 8 இடமான விருச்சக ராசியின் குணங்களான முன் கோபம், மறைமுக விசங்களை அறிதல், வாதம் மற்றும் அமான்ஷ்ய விசயங்களில் ஈடுபாடு உண்டாகும்.

குரு கேது சேர்க்கை இருப்பதால், சிலம்பரசன் பிற்காலத்தில் ஆன்மீக நாட்டம் கொண்டு ஆன்மீக பணிகள் செய்வார்.

இவருக்கு கோசாரத்தில் 2006ல் சிம்மத்தில் கேது திரிகோணத்தில் பிறப்பு புதன் (தனுசில்), நயன்தாரா உடன் காதல் உண்டானது.


புதன் - பூராடம் நான்காம் பாதம்
கேது - மூலம் 3 பாதம் (சுய சாரம்)
இவருக்கு புதன் மற்றும் கேது இருவரும் சேர்க்கை பெற்று தனுசு ராசியில் உள்ளனர்.

நாடிபடி குருவின் 2 பார்வை மற்றும் சுக்கிரன் 11 பார்வை கேது மேல் ஆனால் இவர்களின் தாக்கம் புதன் மீது இல்லை. காரணம் கேது இருப்பது மூலம் நட்சத்திரம் புதன் இருப்பது பூராடம் நட்சத்திரம். குருவின் மற்றும் துலாம் ராசிக்கு நகர்வை கேது வசீகரித்து கொள்கிறார். செவ்வாய் பார்வையும் புதன் மேல் உள்ளது. மேலும் இவரின் ஜாதகத்தில் சனி சுக்கிரன் பரிவர்த்தனை. இதனால் குருவுக்கு (ஜாதகருக்கு) சுக்கிரன் (இளம் பெண் ) மற்றும் சந்திரன் (வயது அதிகம் உள்ள பெண்) என்ற பெண் கிரகங்கள் சமந்தம் உண்டாகிறது. சனி சுக்கிரன் பரிவர்த்தனை தாமத திருமணம் தருகிறது.

பிறகு 2014ல் கோசாரத்தில் ஜெனன புதனுக்கு 9 ல், கோசார கேது சஞ்சரிக்கும் காலத்தில், ஹன்சிகா உடன் காதல் உண்டாது. இவருக்கு கோசார குரு சுக்கிரனுக்கு திரிகோணத்தில் வரும் காலம் 2016 மற்றும் 2017 ஆண்டுகளில் திருமணம் நடைபெறும்.

ஏற்கனவே சொல்லியபடி, பிறப்பு ஜாதகத்தில் சனி செவ்வாய் தொடர்பு இருந்தால், தொழில் முடக்கம், எதிரிகளால் பிரச்னை, முன்னேறமின்மை இருக்கும். இவருக்கு ஜெனன காலத்தில் சனி செவ்வாய் சேர்க்கை (சுக்கிரன் சனி பரிவர்த்தனைக்கு பின்), பிறப்பு செவ்வாய்க்கு சனி திரிகோணத்தில் வரும் காலம் ஜாதகர் தொழில் எதிரிகள் மற்றும் முடக்கம் சந்திப்பார் என்ற கூற்றுப்படி, சிலம்பரசன் ஜாதகத்தில் சனி துலாமில் பிறப்பு செவ்வாய்க்கு 9 இடத்தில சனி இருக்கும் சமயம் தொழில் சங்கடங்கள், எதிரிகளால் பிரச்னைமற்றும் பல எதிர்ப்புகளை சம்பாதித்தார். தற்பொழுது சனி வக்கிற நிவர்த்தியாகி விருச்சகம் செல்வதால், இனி முன்னேற்றம் காண்பார்.


No comments:

Post a Comment