Thursday 27 November 2014

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நீக்கம்

6வது ஐ.பி.எல் போட்டிகளில் பெட்டிங், பிக்ஸிங் முறைகேடுகள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான குழு விசாரணை நடத்தி அறிக்கையைத் தாக்கல் செய்தது.

இந்த அறிக்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ராஜ்குந்த்ரா உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அத்துடன் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் என். சீனிவாசனுக்கு இதில் நேரடித் தொடர்பு இல்லாவிட்டாலும் அவர் இந்த புகார்கள் குறித்து அக்கறை கொள்ளவில்லை என்று கூறியிருந்தது. 

ஆனாலும் தொடர்ந்து குருநாத் மெய்யப்பன் சென்னை அணி நிர்வாகி அல்ல, சென்னை அணியின் ஆதரவாளர் என்றே கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது பிசிசிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், குருநாத் மெய்யப்பன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிதான் என்று ஒப்புக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உண்மையான உரிமையாளர் யார்? சென்னை அணிக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்குமான தொடர்புகள் என்ன? இதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

மேலும் முகுல் முட்கல் அறிக்கையின்படியே, ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நீக்கலாம்; இதற்கு வேறு எந்த ஒரு விசாரணையுமே தேவையில்லை என்றும் தற்போதைய நிலையில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் என். சீனிவாசன் போட்டியிடாமல் ஒதுங்கியிருக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதி நீக்கம் செய்யப்படும் செய்யப்படும் வாய்ப்புகள் அதிகம்.



No comments:

Post a Comment